. சென்னை உள்ளி(ட்)ட... நாடு முழுவதும் உள்ள அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட... கடந்த 23-ம் தேதி காலை 9 மணி முதல் 25-ம் தேதி காலை 9 மணி வரை, என்றும் நடவாத அதிசயமாக 'ஆல் இந்தியா ரேடியோ’ தன் குரலை நிறுத்திக் கொண்டது. கூடவே... 'தூர்தர்ஷன் நேஷனல்,’ 'பொதிகை’ தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் இந்தக் காலகட்டத்தில் நிறுத்தப்பட்டன. ஆயிரம் பொழுதுபோக்குகள் கொண்ட நகரவாசிகளுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை. கிராமவாசி களுக்குதான் பாதிப்பு!.
ஆல் இந்தியா வானொலி நிகழ்ச்சித் தயாரிப் பாளர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் அருணன் நம்மிடம், ''கடந்த 1997 நவம்பர் 23-ம் தேதி பிரசார்

பாரதி சட்டம் அமலுக்கு வந்தது. அதன் பின்னரும் நாங்கள் மத்திய அரசு ஊழியர்களாகத் தொடர்ந்து வந்தோம்.

ஆனால், இப்போது எங்களை பிரசார் பாரதியின் நேரடி ஊழியர்களாக மாற்றுவதற் கான சட்டம் ராஜ்யசபாவில் உள்ளது. அதனால் ஊழியர்களின் நிலை அந்தரத்தில் உள்ளது.

1991-ம் ஆண்டுக்குப் பிறகு வேலை நியமனம் எதுவும் இல்லை. இருக்கும் ஆள் பற்றாக்குறையை அனுசரித்து கூடுதல் வேலை செய்து வருகிறோம். ஆனால், அரசின் தொடர் நடவடிக்கைகள் இந்த இரண்டு நிறுவனங்களையும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாக்கி உள்ளது. நிகழ்ச்சி நடத்த வரும் கலைஞர்களுக்கு சன்மானம் வழங்குவோம். கடந்த ஒரு வருடமாக அதைக்கூட சரியாக வழங்க முடியாத நிலையில் உள்ளோம். ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் சொத்து மதிப்பு

1 லட்சம் கோடி. ஆனால், அதை

6,000 கோடி என்று குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது, இவற்றைத் தனியாருக்கு விற்க முயற்சி நடப்பதுபோல உள்ளது. அதனால், பிரசார் பாரதி சட்டத்தை திரும்பப் பெற்று, பழையபடி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இரண்டு நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு இப்போதே நோட்டீஸ் அளித்துள்ளோம்.'' என்றார்.

இது குறித்து மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் தரப்பில் கேட்டதற்கு, ''ஊழியர்களின் கோரிக்கை நியாயமானதுதான். இதில் கேபினெட் அமைச்சர்தான் முடிவு எடுக்க முடியும்'' என்றார்கள். இதுவே தேர்தல் நேரமா இருந்திருந்தா, ஆள்பவர்கள் அசால்ட் காட்டுவார்களா?

படம்: கே.கார்த்திகேயன்