Published:Updated:

வங்கிக் கொள்ளையனைப் பிடித்த `அந்த' நிமிடங்கள் - இன்ஸ்பெக்டர் டீமின் திகில் அனுபவம் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வங்கிக் கொள்ளையனைப் பிடித்த `அந்த' நிமிடங்கள் - இன்ஸ்பெக்டர் டீமின் திகில் அனுபவம் 
வங்கிக் கொள்ளையனைப் பிடித்த `அந்த' நிமிடங்கள் - இன்ஸ்பெக்டர் டீமின் திகில் அனுபவம் 

வங்கிக் கொள்ளையனைப் பிடித்த `அந்த' நிமிடங்கள் - இன்ஸ்பெக்டர் டீமின் திகில் அனுபவம் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


 

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள வங்கியில், கொள்ளையடித்துவிட்டு தப்பிய கொள்ளையனைப் பிடித்த அடையாறு  போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையிலான போலீஸார் தங்களுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். 

``சென்னை அடையாறு இந்திரா நகர்  வாட்டர் டேங்க் பகுதியில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையில் எஸ்.எஸ்.ஐ முருகேசன், ஷெரீப், ஏட்டு சந்திரகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, வேகமாக வந்த டூவீலர், முன்னால் சென்ற ஒரு டூவீலரில் மோதியது. அந்த நேரத்தில் `டமார்’ என்று பயங்கரச் சத்தம் கேட்டது. டயர்தான் வெடித்துவிட்டது என்று கருதி அங்கு சென்றோம். அப்போதுதான், டூவீலரிலிருந்து கீழே விழுந்த வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அந்தச் சமயத்தில் `திருடன் திருடன்’ என்று சிலர் அந்த வாலிபரை விரட்டிக்கொண்டு வந்தனர். வங்கியில் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையடித்த திருடன் என்று தெரிந்ததும் பொதுமக்களுடன் சேர்ந்து நாங்களும் அவனை விரட்டினோம்.

அவன் கையில் துப்பாக்கியிருந்ததைப் பார்த்தோம். இன்ஸ்பெக்டர் ஜோசப் சாருக்குக் காராத்தே தெரியும். இதனால், கொள்ளையனை அவர்தான் துணிச்சலாக விரட்டிக்கொண்டுச் சென்றார். அவருக்குப் பின்னால் பொதுமக்களும் போலீஸாரும் வந்தனர். கொள்ளையனின் கையில் துப்பாக்கி இருந்ததால் நாங்கள் கவனத்துடன் செயல்பட்டோம். எங்கள் கையில் கொள்ளையன் சிக்கியதும் முதலில் அவனிடமிருந்த துப்பாக்கிகளைப் பறித்தோம். அடுத்து இன்ஸ்பெக்டர் ஜோசப், கொள்ளையனின் முட்டியில் தாக்கி அப்படியே அவனை அமர வைத்தார். அதற்குள் பொது மக்கள் அங்கு திரண்டு வந்துவிட்டனர்.

 அவன் கையிலிருந்த துப்பாக்கிகளைக் கைப்பற்றிய பிறகுதான் நிம்மதியடைந்தோம். அப்போதுதான் டயர் வெடிக்கவில்லை. வெடித்தது துப்பாக்கி என்றும் தெரிந்தது. போலீஸ் பயிற்சியின்போதே, ஆயுதத்தோடு இருக்கும் எதிரியை எப்படி பிடிக்க வேண்டும் என்கிற ட்ரெயினிங்கையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதனால், எப்படி மடக்கிப் பிடிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். வங்கிக் கொள்ளையனிடம் துப்பாக்கி இருப்பது தெரிந்ததும் கவனமாகத்தான் அவனைப் பின்தொடர்ந்தோம். அவனை நாங்கள் விரட்டியபோது, எங்களிடமிருந்து தப்பிக்கத்தான் முதலில் அவன் முயற்சி செய்தான். எங்களைத் தாக்க அவன் பின்நோக்கி திரும்பினால் அவனால் ஓட முடியாது. இதுவே எங்களது ப்ளஸ். இதுபோன்ற மனக்கணக்குகளை மனதில் போட்டபடியே அரை கிலோ மீட்டர் துரத்தி கொள்ளையனைப் பிடித்தோம். 

கொள்ளையனைப் பிடித்ததும் அவன் எங்களை இந்தியில் திட்டினான், தப்பிக்க முயன்றான். ஆனால், எங்களுடைய உடும்புப் பிடியிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. கொள்ளையனை உடனடியாகப் பிடிக்கவில்லை என்றால், துப்பு துலக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். போலீஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் கொள்ளையனைப் பிடித்துவிட்டோம். கொள்ளையனைப் பிடிக்க உதவியவர்களை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர். பொதுமக்களுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது" என்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு