Published:Updated:

சிறுவனை கொன்றவருக்கு தூக்கு; தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: விருத்தாச்சலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு, சிறுவன் ஒருவனை கடத்திக் கொன்ற சுந்தர் என்பவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனை தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன்- மகேஸ்வரி தம்பதியின் மகன் சுரேஷ்.
சுரேஷ்,  கடந்த 2007-ம் ஆண்டு பள்ளி சென்று திரும்பும்போது சுந்தர் என்பவரால் கடத்தி கொலை செய்யப்பட்டான்.

இந்த வழக்கில் சுந்தர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு கடலூர்  நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்

##~~##
முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றமும் நிராகரித்திருந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சுந்தர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தூக்குத்தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தூக்கு தேதியை விசாரணை நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.