Published:Updated:

நெல்லை அருகே தே.மு.தி.க. நிர்வாகி அடித்துக் கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை அருகே தே.மு.தி.க. நிர்வாகி அடித்துக் கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லை அருகே தே.மு.தி.க. நிர்வாகி அடித்துக் கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகியை மர்ம நபர்கள் அடித்துக் கொன்று, உடலை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகியை மர்ம நபர்கள் அரசியல் காரணத்துக்காக அடித்துக்கொன்று, உடலை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிராஜன். இவர் தே.மு.தி.க-வின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினராகவும் சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவரது உடல், நடுவக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் கிணற்றில் தண்ணீரில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் புளியங்குடி டி.எஸ்.பி-யான ஜெயக்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீதிராஜனின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்தன. அத்துடன், அந்தக் கிணற்றுக்கு அருகில் ரத்தம் உறைந்து கிடந்தது. அதனால், நீதிராஜனை மர்ம நபர்கள் அடித்து உதைத்து கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்றிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

அரசியல் கட்சியில் நீதிராஜன் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சிலருடன் மோதல் போக்கு இருந்துள்ளது. காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் இதுகுறித்த தகவல் தெரிய வந்துள்ளதால், அரசியல் காரணங்களுக்காக நீதிராஜன் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.  இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.      

அடுத்த கட்டுரைக்கு