Published:Updated:

தருமபுரியில் செய்தியாளரைக் கொடூரமாகத் தாக்கிய காவலர்..!

தருமபுரியில் செய்தியாளரைக் கொடூரமாகத் தாக்கிய காவலர்..!
தருமபுரியில் செய்தியாளரைக் கொடூரமாகத் தாக்கிய காவலர்..!

தருமபுரியில் செய்தியாளரைக் கொடூரமாகத் தாக்கிய காவலர்..!

உறவினர் விசேஷத்துக்குச் சென்று திரும்பிய செய்தியாளரை அவர் மனைவியின் கண் முன்னே காவலர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை மாலை நாளிதழின் செய்தியாளர் ஸ்ரீதர். இவர் இன்று அதிகாலை 4 மணிக்கு மனைவி சரண்யா மற்றும் குழந்தைகள் சஞ்சை, சந்துரு ஆகியோருடன் சேலத்தில் உறவினர் சுபநிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு தருமபுரிக்குத் தனது காரில் திரும்பியுள்ளார். அப்போது பெரும்பாலையில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்த தலைமைக் காவலர் சக்திவேல், செய்தியாளர் ஸ்ரீதர் வந்த காரை மறித்து சோதனை செய்து, `எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று விசாரித்துள்ளார். சார் உள்ளூர் செய்தியாளர் ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். 

நீதான் அந்த ஸ்ரீதரா..? நான் லஞ்சம் வாங்கியதாகத் தருமபுரி எஸ்.பி-யிடம் தகவல் சொன்னவன் நீதானா, உன்னைத்தான் கடந்த ஒரு வாரமாகத் தேடிட்டு இருந்தேன் என்று காரில் இருந்த ஸ்ரீதரை வெளியே இழுத்துப்போட்டு கல்லால் தாக்கி, காலில் போட்டு மிதித்துள்ளார் காவலர் சக்திவேல். மனைவி குழந்தைகள் முன்பு நடந்த இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே செய்தியாளர் ஸ்ரீதர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மனைவி சரண்யாவும் கார் டிரைவர் முருகனும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளார். 

தருமபுரி மாவட்டத்தில் செய்தியாளர்மீது நடந்துள்ள தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு