Published:Updated:

கோவையில் 13 வயது மாணவி பலாத்காரம்: உறவினர் உள்ளிட்ட 5 பேர் கைது!

கோவையில் 13 வயது மாணவி  பலாத்காரம்: உறவினர் உள்ளிட்ட 5 பேர் கைது!
கோவையில் 13 வயது மாணவி பலாத்காரம்: உறவினர் உள்ளிட்ட 5 பேர் கைது!
கோவையில் 13 வயது மாணவி  பலாத்காரம்: உறவினர் உள்ளிட்ட 5 பேர் கைது!

கோவை: கோவையில் மயக்க ஊசி போட்டு 9 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் உள்ளிட்ட 5 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்த 13 வயது மாணவி மஞ்சுளா   (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு  படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மஞ்சுளா பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர்.  மஞ்சுளா ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் உடல்நலம்  பாதிக்கப்பட்டது. எனவே அவரது மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த  பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தனது ந்ண்பரான  கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார்.

##~~##
அப்போது மஞ்சுளாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி,மயக்க ஊசி போட்டு,  கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி  உள்ளனர்.
பின்னர் மஞ்சுளா மயக்கம் தெளிந்து எழுந்தபோது, கோபாலகிருஷ்ணனும், பாலுவும்  தன்னை சீரழித்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும்  மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை  கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
அதன்பின்னரும் பலமுறை மிரட்டி அச்சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம்  செய்து வந்துள்ளனர்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து  சென்றபோது, அங்கு அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55)  ஆகியோரும் இதேக்கொடுமையை செய்துள்ளனர்.
இந்நிலையில் நடந்த சம்பவத்தை அறிந்த உறவினர் கார்த்திக் (19) என்பவரும்  அவ்வப்போது வந்து வீடுபுகுந்து மஞ்சுவை பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில்தான் இந்த கொடுமை பொறுக்க முடியாமல், அவர் கோவை மாநகர  போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து, இது குறித்து புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் ராமநாதபுரம் போலீசார்,வன்கொடுமையில் ஈடுபட்ட  கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை கைது  செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட  மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி மாணவிக்கு நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க சட்ட திருத்தம்  கொண்டுவரப்பட்ட பின்னரும்,  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.