Published:Updated:

மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

‘ஷாக்’ அடிக்கும் விவகாரம்

மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

‘ஷாக்’ அடிக்கும் விவகாரம்

Published:Updated:
மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

சில வருடங்களுக்கு முன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரலில், தமிழக அரசியல் தலைவர்களிடம் பேசி, பெரும் புயலை கிளப்பியவர் கோவை வெள்ளியங்கிரி. இப்போது, சேலத்தில் அரங்கேற்றப்பட்டுள்ள மிமிக்ரி விவகாரம் அதகளமானது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உதவிப்பொறியாளராகப் பணியாற்றும் ஜெயக்குமார் சமீபத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, ‘அமைச்சர் தங்கமணியின் உத்தரவில்தான் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, அமைச்சர் தங்கமணியிடமே, ‘ஏன் சார்... இப்பிடி?’ என்று தனது மனக்குமுறலை முறையிட்டிருக்கிறார் ஜெயக்குமார். ‘நானா... சஸ்பெண்ட் செய்யச் சொன்னேனா?’ என அதிர்ச்சியான அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான்   போனில் பேசியது அமைச்சர் இல்லை’ என்ற உண்மை அதிகாரிகளுக்கே தெரியவந்திருக்கிறது. விசாரணையின் முடிவில், ‘அமைச்சரைப்போல் பேசியது திண்டுக்கல்லைச் சேர்ந்த பலகுரல் மன்னன் சவரிமுத்து’ என்பதைக் கண்டுபிடித்ததோடு அவரைக் கண்டித்தும் அனுப்பியிருக்கிறது மினிஸ்டர் தரப்பு.

மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமைச்சர்போல பேசி ஒரு அரசு நிறுவனத்தில் அதிகாரியையே மாற்றியது எவ்வளவு பெரிய குற்றம்? திண்டுக்கல்காரருக்கு மேட்டூரில் என்ன வேலை?... ஏன் இப்படி செய்தார்?...   என்பதையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டிய மினிஸ்டர் தரப்பு, இதை மேம்போக்காக விட்டுவிட்டது. அனல் மின்நிலைய விவகாரத்தில் மிமிக்ரி மூலம் மூக்கை நுழைப்பது யார் என்று விவரமறிந்தவர்களிடம் பேசினோம்.

‘‘மின்சார வாரிய மாநில அண்ணா தொழிற்சங்க தலைவர் சம்பத், மேட்டூர் மின்திட்ட கூட்டுறவு சங்கத் தலைவரும், அனல்மின் நிலையத்தில் ஹெல்ப்பராகப் பணியாற்றுபவருமான தங்கராஜ், முன்னாள் எடப்பாடி தொகுதி செயலாளருமான மாது என்கிற மாதப்பன் ஆகிய மூவரும் கூட்டுசேர்ந்துதான் இந்தத் தகிடுத்தத்தங்ளை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், இந்த மிமிக்ரி விவகாரம் இப்போது ஆரம்பித்தது கிடையாது. முதலில் இந்த மிமிக்ரி வலையில் சிக்கியது  மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை மனைவி புஷ்பாதான்’’ என்று அதிரவைக்கிறார்கள்.

``எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பு புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சரவணனிடம் அடிபொடியாக இருந்து போஸ்டிங் போடுவதில் கல்லாகட்டி, எடப்பாடி தொகுதி செயலாளராக உயர்ந்தவர்தான் மாது என்கிற மாதப்பன். சரவணன் விபத்தில் இறந்துவிட, எடப்பாடி பழனிச்சாமி  மாவட்டச் செயலாளர் ஆனார். மாதப்பனின் மாயாஜாலங்கள் எடப்பாடிக்கு தெரியவந்ததும் மாதப்பனை பதவியிலிருந்து தூக்கிவிட்டார். எடப்பாடியிலிருந்து மேட்டூருக்கு இடம்பெயர்ந்த மாதப்பன். செம்மலையின் மைத்துனர் ராஜாராம் மூலமாக செம்மலை குரூப்பில் இணைந்தார். சரவணன் இருக்கும்போது அவரோடு கார்டனுக்கு சென்ற காட்சிகளை பயன்படுத்திக்கொண்டு எனக்கு இளவரசி உறவினர்களையெல்லாம் தெரியும் என செம்மலை மனைவி புஷ்பாவிடம் கெத்து காட்டினார் மாதப்பன். இளவரசியின் உறவினர்கள் போல புஷ்பாவிடன் வாய்ஸ் மாற்றி பேசிய சம்பவங்களும் நடந்தன. அதை நம்பிய புஷ்பா, அந்தக் குரலில் பேசியவரிடம்,  ‘எடப்பாடி பழனிச்சாமி எங்களை ஓரங்கட்டுகிறார்’ என்று அழுது புலம்பியிருக்கிறார். எப்படியும் `இந்த முறை செம்மலைக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்’ என புஷ்பாவிடம் அந்தக் குரல் உறுதிமொழி கொடுத்துள்ளது.

மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

அதற்கு பிறகு, செம்மலை வீட்டில் ஸ்ட்ராங் ஆனார் மாதப்பன். அனல்மின் நிலையத்தின் சாம்பல் கான்ட்ராக்ட்டில் பல லட்சங்கள் புரளும் என புஷ்பாவுக்கு ஐடியா கொடுத்து, செம்மலையோடு சென்னைக்குச் சென்று பினாமி பெயரில் சாம்பல் கான்ட்ராக்ட் எடுக்கவைக்கும் அளவுக்குப் போனார் மாதப்பன். செம்மலையின் மைத்துனர் ராஜாராம்தான் இப்போது சாம்பால் கான்ட்ராக்ட்களை கவனித்து வருகிறார். அந்த கான்ட்ராக்ட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து, அது தனியாக விசாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ வீட்டின் செல்வாக்கு, சாம்பல் கான்ட்ராட் மூலம்  கிடைத்த அதிகாரிகள் பரிச்சயம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அனல்மின்நிலைய விவகாரத்துக்குள் நுழைந்த மாதப்பன், மேட்டூர் மின்திட்ட கூட்டுறவு சங்கத் தலைவருமான தங்கராஜையும், அனல்மின் நிலையத்தில் மின்சார வாரிய மாநில அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சம்பத்தையும் கைக்குள் போட்டுக்கொண்டு அமைச்சர் தங்கமணி குரலில் பேசி, ட்ரான்ஸ்ஃபர் விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள். இதற்கு மாதப்பன்தான் முக்கியக் காரணம். இதுவரைக்கும் 28 ட்ரான்ஸ்ஃபர்கள் செய்து பல லட்சங்களைத் திரட்டியிருக்கிறார்கள். இது எம்.எல்.ஏ-வுக்கும் அவர் மனைவிக்கும் தெரியுமா என்று தெரியவில்லை’’ என அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

மிமிக்ரி மினிஸ்டர் வாய்ஸ்!

இது தொடர்பாக அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். ‘‘ட்ரான்ஸ்பருக்குத்தான் அப்படி நடந்திருக்கிறது. திண்டுக்கலைச் சேர்ந்த சவரிமுத்து என்பவர் குரல் மாற்றிப் பேசி இருக்கிறார். எனக்குத் தகவல் தெரிந்ததும் உடனடியாக ஆக்‌ஷன் எடுத்துவிட்டேன்’’ என்றார்.

மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலையிடம் பேசினோம். ‘‘எல்லாம் சுத்தப் பொய். சாம்பல் கான்ட்ராக்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தங்கராஜ் என்பவர் மூலம் சம்பந்தப்பட்ட அந்த என்ஜினீயர் முறைகேடாக ட்ரான்ஸ்ஃபர் வாங்க முயன்றுள்ளார். தங்கராஜ் திண்டுக்கலைச் சேர்ந்த சவரிமுத்து மூலம் இதை செய்துள்ளார்.  இது அதிகாரிகளின் மூலம் அமைச்சருக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. என்னை இதில் தொடர்புபடுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை’’ என்றார்.

போனில்  வந்த குரலுக்கு ட்ரான்ஸ்ஃபர் போட்ட அதிகாரிகளை என்ன சொல்வது?

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism