Published:Updated:

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!
பிரீமியம் ஸ்டோரி
“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

Published:Updated:
“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!
பிரீமியம் ஸ்டோரி
“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

கவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட மனு தொடர்பாக, விவரம் கேட்பதற்கு அரசு அலுவலகம் சென்ற தகவல் உரிமை ஆர்வலர்கள் இருவரை சிறையில் அடைத்த கொடுமை சமீபத்தில் நடந்துள்ளது.

தகவல் உரிமை ஆர்வலரும், `இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்’பின் பொதுச் செயலாளருமான செல்வராஜும், அந்த அமைப்பின் தலைமை நிலையச் செயலாளர் அண்ணாமலையும் தங்களின் மனு குறித்து விசாரிக்க, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில நிர்வாகத் துறை தலைமை அலுவலகத்துக்குக் கடந்த 21-ம் தேதி சென்றனர். அங்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து நம்மிடம் விவரித்தார், செல்வராஜ்.  

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

“சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே எம்.சூரக்குடி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பட்டாவும் வாங்கிவிட்டார். இது பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் வாங்கி, அதிகாரிகளுக்குப் புகார்கள் அனுப்பினோம். ஒரு வருடத்துக்குப் பிறகு அந்தப் பட்டாவை கேன்சல் பண்ணினாங்க. ஆனா, அதுக்குள்ளே அந்த நபர் அந்த இடத்துல 2 மாடி வீடு கட்டிவிட்டார். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடந்த பிப்ரவரியில் சென்னை நில நிர்வாகத் துறை ஆணையரிடம் அண்ணாமலை புகார் செஞ்சார். ஜூன் மாதம் ஆணையர் அலுவலகத்தில் அப்பீல் செய்தும் நடவடிக்கை இல்லை. திரும்பவும் 3 முறை அலைஞ்சோம். ஆணையரைப் பார்க்கவே முடியல.

கடந்த மாதம் 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆணையரைப் பார்க்கப் போனோம். ஆணையர் மீட்டிங்ல இருக்கிறதால இணை ஆணையரைப் பார்க்கச் சொன்னாங்க. இணை ஆணையர் விஜயராணியைப் பாக்கப்போனோம். அவங்களும் மீட்டிங்ல இருந்தாங்க. ரொம்ப நேரமா காத்திருந்தோம். ‘பார்க்க முடியாதுன்னு சொன்னா நாங்க கிளம்புவோம்ல’னு இணை ஆணையரோட பி.ஏ-கிட்ட சொன்னேன். உடனே, இணை ஆணையர் எங்களை உள்ளே கூப்பிட்டாங்க. உள்ளே போனதும், ‘உங்களை இங்கே யார் வரச்சொன்னது? இங்கெல்லாம் பப்ளிக் வரக்கூடாது’னு சத்தம் போட்டாங்க. ‘நாங்க ஒரு அப்பீல் கொடுத்திருகோம். என்ன ஆச்சுன்னே தெரியல. அதுபத்தி விசாரிக்கத்தான் வந்தோம்’னு சொன்னேன். ‘அதை கலெக்டர் தான் பாக்கனும்’னு சொன்னாங்க. ‘கலெக்டரைப் பாத்து எதுவும் நடக்கலேன்னுதான் இங்கே புகார் பண்ணியிருக்கோம்’னு சொன்னோம். கோபமான இணை ஆணையர், ‘அதெல்லாம் எங்க வேலை இல்லை. எங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையில்லை. எழுந்து வெளியே போங்கடா’னு சொன்னாங்க. அப்புறம், ‘இவங்களை வெளியே விடாதே. ரூமை லாக் பண்ணு’னு இணை ஆணையர் கத்தினாங்க. அலுவலர்கள் கதவை மூடி எங்களை சிறை வெச்சுட்டாங்க.

கொஞ்ச நேரத்துல அண்ணா சதுக்கம் ஸ்டேஷன் எஸ்.ஐ தயாளன் வந்தார். புகார் தருவதாக நாங்கள் சொன்னோம். அதை காதில் வாங்காமல் எங்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கு, இன்ஸ்பெக்டர் எங்களை விசாரிச்சு டைரியில எழுதிக்கிட்டார். இணை ஆணையர் அறைக்குள்ள போனது வரைக்கும் எழுதியவர், அதுக்குப்பிறகு நாங்க சொன்ன எதையும் பதிவு செய்யவேயில்லை. சாயங்காலம் அஞ்சரை மணிக்கு மேல இணை ஆணையர் அலுவலகத்தில இருந்து புகார் கொடுக்க வந்தாங்க. ஒன்பது மணிக்கு மேல எஃப்.ஐ.ஆர் போட்டுட்டு, மாஜிஸ்திரேட் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு, இரவு 2 மணிக்கு புழல் சிறையில அடைச்சாங்க” என்றார் வேதனையுடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எழுந்து வெளியே போங்கடா!” - ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

இதுபற்றி நில நிர்வாகத்துறை இணை இயக்குநர் விஜயராணியிடம் கேட்டோம். “நத்தம் காலிமனைக்கு பட்டா கொடுக்கலாம் என அரசே சொல்லியிருக்கு. இவங்க புகார்கள் அனுப்பின பிறகு பட்டாவை ஆர்.டி.ஓ கேன்சல் பண்ணிட்டார். இடையில் அந்த நபர் அந்த நிலத்துல வீடு கட்டிட்டார். அந்த வீட்டை இடிங்கன்னு சொல்றாங்க. இதுபத்தி முடிவெடுக்க வேண்டியது கலெக்டர். கடந்த 21-ம் தேதி  ரெண்டு பேரும் வந்தாங்க. நாங்க முக்கியமான மீட்டிங்ல இருந்தோம். இவங்க சத்தம் போட்டுக்கிட்டிருந்ததைக் கேட்டு உள்ளே கூப்பிட்டேன். பொறுமையாத்தான் பதில் சொன்னேன். ‘நீங்க கலெக்டர் மேல நடவடிக்கை எடுக்கணும்’னு சொன்னாங்க. ‘நீங்க கிளம்புங்க... கலெக்டர் ரிப்போர்ட் வந்தவுடனே கூப்பிடுறோம்’ன்னு சொன்னேன். வாடி போடின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. உடனடியா போலீஸுக்குத் தகவல் சொன்னேன். இரண்டரை மணிக்கெல்லாம் புகார் கொடுத்துட்டோம். அவரை அடைச்சு வைக்கல. இதுக்கு மேல இதைப்பத்தி நான் பேச விரும்பலே” என்றார்.

அண்ணா சதுக்கம் எஸ்.ஐ தயாளனிடம் கேட்டோம். “அறைக்குள்ள புகுந்து மிரட்டினதா நில நிர்வாகத்துறை ஆணையர், ஸ்டேஷனுக்குப் போன் பண்ணினார். அண்ணாமலையையும், செல்வராஜையும் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டு வந்து விசாரிச்சோம். சாயங்காலம் 6.15-க்குதான் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு, எஃப்.ஐ.ஆர் நடைமுறைகள் முடிச்சு ரிமாண்ட் செஞ்சோம்” என்றார்.

ஒரு புறம்போக்கு நிலத்துக்கு விசாரணையே செய்யாமல் பட்டா கொடுக்கிறார் அதிகாரி. அது குறித்து புகார் செய்தபிறகு பட்டாவை நீக்குகிறார்கள். ஏன் பட்டா கொடுத்தார்கள், ஏன் விலக்கினார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. இரண்டரை மணிக்கே புகார் கொடுத்து விட்டோம் என்கிறார் இணை ஆணையர். மாலை 6.15-க்குதான் புகார் வந்தது என்கிறார் உதவி ஆய்வாளர். இதில் எது சரி என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்டால் இதுதான் நிலை என்பதுதான் இதன் மூலம் சொல்லப்படும் செய்தியா? 

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆ.முத்துக்குமார், உ.கிரண்குமார்     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism