Published:Updated:

"அவங்க அடிக்குப் பயந்தே அடிமையாகிப்போனோம்!" - கதறும் கச்சநத்தம் மக்கள்

"அவங்க அடிக்குப் பயந்தே அடிமையாகிப்போனோம்!" - கதறும் கச்சநத்தம் மக்கள்

"அவங்க அடிக்குப் பயந்தே அடிமையாகிப்போனோம்!" - கதறும் கச்சநத்தம் மக்கள்

"அவங்க அடிக்குப் பயந்தே அடிமையாகிப்போனோம்!" - கதறும் கச்சநத்தம் மக்கள்

"அவங்க அடிக்குப் பயந்தே அடிமையாகிப்போனோம்!" - கதறும் கச்சநத்தம் மக்கள்

Published:Updated:
"அவங்க அடிக்குப் பயந்தே அடிமையாகிப்போனோம்!" - கதறும் கச்சநத்தம் மக்கள்

தமிழகத்தில் இதுவரைக்கும் இப்படியொரு சாதிவெறித் தாக்குதல் நடந்திருக்க முடியாது. அந்த அளவுக்குக் கொடூரமான முறையில் கச்சநத்தம் கிராமத்தில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இருவர் ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் சாதி தீ பற்றி எரிய பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக அனைத்துச் சமூகத்தினரும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் மாற்றுசாதியினரின் தாக்குதலில் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலைமறியல் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்குச் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசாங்கத்துக்குக் கோரிக்கைகள் வைத்திருக்கும் அமைப்புகளில் ஒன்றான மூவேந்தர்

புலிப்படை கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வையவனிடம் பேசினோம். 

``கச்சநத்தம் கிராமம் போல கடந்த ஆறு ஆண்டுகளாக ஆலடி நத்தம், மாரநாடு, திருப்பாசேத்தி, ஆவாரங்காடு போன்ற பகுதிகளில் சாதி வெறியர்களால் எஸ்.சி / எஸ்.டி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளர் கண்காணிப்பின்கீழ் இப்பகுதியைக் கொண்டுவர வேண்டும். இந்தப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த பழையனூர், திருப்பாசேத்தி காவல்நிலைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதோடு, அவர்களையும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிவகங்கை மாவட்ட போலீஸாருக்குப் பதிலாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிவகங்கை நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறு மாவட்ட நீதிமன்றத்தில் நடத்திட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை கொலையில் தொடர்புடைய சாதி வெறியர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். 

திருப்பாசேத்தி, பழையனூர், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில்  வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்தாத மாவட்ட ஆட்சியர் லதா, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரை இடைநீக்கம் செய்து எஸ்.சி./ எஸ்.டி ஆணையத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சாதி வெறியர்களால் கொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். கச்சநத்தம் கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், மாவட்டத்தின் வேறு

பகுதியில் இடம் தேர்வுசெய்து, தலா ஐந்து சென்ட் நிலம் கச்சநத்தம் மக்களுக்கு வழங்கிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும்வரை நாங்கள் இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது 90 நாள்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதானக் கோரிக்கை" என்றார்.

கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம் பேசும்போது, ``இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம் போல எங்க ஊர் மாற்றுச் சாதியினரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது. நாங்க பொருளாதாரத்திலேயும், விவசாயத்திலேயும் நல்லாத்தான் இருக்கோம். அப்படி இருந்தும் என்ன பயன். நாங்கதான் இந்தச் சாதியிலே பிறந்துட்டோமே. எங்களோட விவசாய வேலைகளைக்கூட விட்டுட்டு, மாற்றுச்சாதியினர் வயல்களில் நாங்க வேலை பார்க்கணும். எங்க பம்பு செட்ல இருந்து அவங்களோட விவசாயத்துக்குத் தண்ணி கொடுக்கணும். அப்படிக் கொடுக்கலைன்னா எங்களை அடிப்பாங்க. இதுக்குப் பயந்துக்கிட்டே நாங்க அடிமையாகப் போனோம். இதையெல்லாம் எங்கள் உறவுக்காரங்க ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துட்டுதான் போவாங்க. உயிர் பயத்தில் வாழ்வதாலேயே எங்க ஊருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க" என்றார் கண்கலங்கியபடி.

இந்தத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகையை

அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தொகையில் தலா 8.25 லட்சம் ரூபாய் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையிடமிருந்தும் 1.75 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்தும் 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலித் அமைப்புகள், ``மின்னல் தாக்கியும், இடி விழுந்தும், வெள்ளம் போன்ற இயற்கை விபத்துகளிலும் உயிரிழப்போரின் குடும்பங்களுக்குக் குறைந்தபட்சத் தொகையாக முதல்வரின் பொது நிவாரணத் தொகையாக ரூ. 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்வரை வழங்கப்படுகிறது. ஆனால், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அப்பாவி தலித்துகளின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வெறும் 1.75 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இழப்பீடு வழங்குவதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான சாதிப் பாகுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் .

முதல்வர் நிதி தரவில்லை என்றாலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வன்கொடுமைச் சட்டம் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கும். முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் நிவாரண நிதி என்ற பெயரில் அறிவிப்பு வெளியிட்டு, அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார்" என்று கொந்தளிக்கின்றன.