Published:Updated:

விலகிய சோனியா... விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

விலகிய சோனியா...  விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்
பிரீமியம் ஸ்டோரி
விலகிய சோனியா... விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

விலகிய சோனியா... விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

விலகிய சோனியா... விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

விலகிய சோனியா... விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

Published:Updated:
விலகிய சோனியா...  விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்
பிரீமியம் ஸ்டோரி
விலகிய சோனியா... விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

‘காதலிக்க மறுத்தாலோ, காதலன் போக்குப் பிடிக்கவில்லை என்று விலகினாலோ அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிடுவதே தீர்வு’ என்ற முடிவுக்கு காதலன்கள் வந்துவிடுகிறார்கள். இதற்கு சமீபத்திய பரிதாப சாட்சி, இளம்பெண் சோனியா.

விலகிய சோனியா...  விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

சென்னை - காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் உள்ளது நெடுங்குன்றம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்ற பெண், காதலன் பிரசாந்த்தால் கடந்த 8-ம் தேதி, கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். நெடுங்குன்றம் கருமாரியம்மன் கோயில் தெருவில் சோனியாவின் உடல் கிடத்தப் பட்டிருக்க, அதே தெருவின் கடைசியில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. அந்த இடம், கொலையாளி ஆகிவிட்ட காதலன் பிரசாந்த்தின் வீடு. அந்த வீடு பூட்டிக்கிடந்தது. பிரசாந்த்தின் பெற்றோர்கள் எங்கு சென்றனர் என்பது யாருக்கும் தெரியவில்லை.

சோனியாவின் குடிசை வீட்டின் முன் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப் பட்டிருந்தது. மகளின் உடல் அருகே சோகமே உருவாக அமர்ந்திருந்தனர் ஆதிமூலம் - சுகந்தி தம்பதியர்.

சோனியாவின் அப்பா ஆதிமூலம், “குடும்பக் கஷ்டம்னுதான் வேலைக்குப் போய் வந்தா. ‘அந்தப் பையன் ரொம்ப தொல்லை கொடுக்கறான்பா’ என்று அழுவாள். இந்த மாசத்தோடு வேலையில் இருந்து நின்னுடுன்னு சோனியாவிடம் சொல்லியிருந்தேன். அதற்குள்ள இப்படி ஆகிடுச்சு” என்றார் உடைந்த குரலில்.

கருமாரியம்மன் கோயில் தெரு வாசிகளிடம் பேசினோம். ‘‘அந்தப் பையன் போக்கு சரியில்லைன்னு பொண்ணு விலகிடுச்சு. அவன் விடாம, விரட்டிக்கிட்டே இருந்தான். சோனியாவின் செல்போன் நம்பரையும் மாத்திப் பார்த்தாச்சு. புது நம்பரையும் கண்டுபிடிச்சு, தொல்லை கொடுத்திருக்கான். சோனியாவின் பெற்றோர், பிரசாந்தின் அப்பா, அம்மாகிட்டே போய் சொல்லிட்டு வந்தாங்க. அவன் கேட்கலை. கடந்த 8-ம்தேதி, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சோனியாவை விடாம விரட்டிக்கிட்டே வந்திருக்கான். பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த சோனியாவை அங்கேயே பொதுமக்கள் முன்னாடி கழுத்தை அறுத்துட்டு ஓடிப் போயிட்டான். ஆனா, அவனோட குடும்பமே தங்கமான குடும்பங்க’’ என்று ‘உச்’ கொட்டினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலகிய சோனியா...  விரட்டிய பிரசாந்த்! - கொலையில் முடிந்த காதல்

நெடுங்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன், ‘‘ஆதிமூலம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவங்க குடும்பத்தினர் எல்லாருமே தீவிரமான அ.தி.மு.க. விசுவாசிகள். அந்தக் கட்சியின் தலைமை இந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யணும்” என்றார்.

பீர்க்கன்கரணை போலீஸார், ‘‘தாம்பரத்தில் சோனியாவுக்கு வேலை. பிரசாந்த்துக்கு தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் கார் நிறுவனத்தில் வேலை. ஒரே தெரு என்பதால் சிரித்துக்கொள்வதும், பேசிக்கொள்வதுமாக இருந்துள்ளனர். இருவரும் ஒரே பைக்கில் வேலைக்கு சென்று வந்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரசாந்த் போக்கு, சோனியாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், பிரசாந்த்தோடு பேசுவதைத் தவிர்த்திருக்கிறார் சோனியா. இதனால், கோபமடைந்த பிரசாந்த், சோனியாவோடு சண்டை போட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், ‘இப்படியே தொல்லை கொடுத்தால் உன்மீது போலீஸில் புகார் கொடுப்பேன்’ என்று பிரசாந்த்தை திட்டியிருக்கிறார் சோனியா. பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில், சோனியாவின் கழுத்தை பிரசாந்த், பிளேடால் அறுத்தது பற்றிய புகார் மாலை ஆறரை மணியளவில் எங்களுக்கு வந்தது. சிகிச்சைக்குக் கொண்டு போகும் வழியிலேயே அந்தப் பெண் இறந்து விட்டார். பிரசாந்தை கைது செய்துள்ளோம்” என்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?

- ந.பா.சேதுராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism