Published:Updated:

டியூஷன் சென்டர்... ஆபாச வீடியோ! - பதறிய பெற்றோர்கள்

டியூஷன் சென்டர்... ஆபாச வீடியோ! - பதறிய பெற்றோர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
டியூஷன் சென்டர்... ஆபாச வீடியோ! - பதறிய பெற்றோர்கள்

தர்மபுரி திடுக்

ந்த வீடியோக்களைப் பார்த்தவர்கள் அனைவரும் முகம் சுளிக்கிறார்கள். “இதுவரைக்கும் நாலு வீடியோ வெளியாகியிருக்கு. எல்லாம் 10-வது 11-வது படிக்கிற பிள்ளைங்க. `வேண்டாம் சார் விட்ருங்க’னு அவனைத் தள்ளிவிடுதுங்க. அதையெல்லாம் கண்டுக்காம அந்தப் பெண்களின்  ஆடைகளை அவிழ்த்து நாசம் பண்ணுறான். ஒரு கட்டத்துக்கு மேல அந்தப் பிள்ளைங்களால  எதுவும் செய்யமுடியாம போகுது. பாவம் சார்... சின்னப் பொண்ணுங்களை இப்படி சீரழிச்சிட்டான் பாவிப்பய. எப்படித்தான் மனசு வந்துச்சோ’’ - தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பலரது புலம்பல்  இப்படியாகத்தான் இருக்கிறது.

டியூஷன் சென்டர்... ஆபாச வீடியோ! - பதறிய பெற்றோர்கள்

அங்கு தனலெட்சுமி டியூஷன் சென்டர் நடத்திவந்தார் சிவக்குமார். தன்னிடம் பாடம் படிக்கச் சென்ற மாணவிகள் பலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து அதை ஆபாச வீடியோ எடுத்து பரப்பிவிட்டார் என்பதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் அவர்.

“எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னை ஆபாசமாகப் படமெடுத்துவிட்டார்” என்று  மாளவிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கொடுத்த புகாரின்பேரில் சிவக்குமார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக, சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புகார் கொடுத்த மாளவிகா என்ற பெண்ணுடைய வீடியோ மட்டுமல்லாது  இன்னொரு பெண்ணின் வீடியோவும் சிவக்குமாருடைய  செல்போனில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டார்கள். அடுத்தடுத்து வீடியோக்கள் சிக்க, ஆடிப்போனது போலீஸ். இதுவரைக்கும் நான்கு வீடியோக்கள் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றன. மேலும் பல மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் சொல் கிறார்கள். வீடியோவை வெளியிட்ட சிவக்குமாரின் கூட்டாளி ஈஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு சிவக்குமாரும் தேடப்பட்டுவருகிறார்.

இதுதொடர்பாக சிவக்குமார் டியூஷன் நடத்திவந்த எம்.ஜி ரோடு பகுதியில் விசாரித்தோம், “அவன் தர்மபுரி, மாரண்ட அள்ளி, பாலக்கோடு என மூன்று இடங்களில் டியூஷன் நடத்தி வந்திருக் கிறான். எங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும் வீட்டில் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்று பயந்துகொண்டு வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் டுடோரியலும் 6 மணி முதல் 8.30 மணிவரைக்கும் டியூஷனும் நடத்தி வந்தான். கிராமப்புற மாணவிகள்தான் அதிகமாக இங்கு  படித்துவந்தார்கள். அவனால், பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பெற்றோர் போலீஸ் கால்ல விழுந்து `எப்படியாவது எங்க பொண்ணோட  மானத்த காப்பாத்துங்க சார்’னு கதறுறாங்க. பார்க்கவே பரிதாபமா இருக்கு. அவனையெல்லாம் நடுரோட்டுல நிக்கவெச்சு அடிச்சே கொல்லணும் ’’ என்று வெடிக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டியூஷன் சென்டர்... ஆபாச வீடியோ! - பதறிய பெற்றோர்கள்

வெளியில் தெரிந்தால் மானம் போகுமே என்ற பதற்றம் பெற்றோர் களிடம் காணப்படுகிறது.

இதுதொடர்பாக இந்த வழக்கை விசாரித்துவரும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாவையிடம் பேசினோம். “மாளவிகா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் சிவக்குமாரை கைதுசெய்தோம். மாளவிகா 2015-ம் ஆண்டு அங்கு படித்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து இப்படி செய்ததால் மாளவிகாவுக்கு ஒன்றும் தெரியவில்லை. இந்த நிலையில், சமீபத்தில்  மாளவிகாவினுடைய வீடியோ பாலக்கோடு பகுதியில் பரவி, அது மாளவிகாவின் வீட்டுக்குத் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகுதான், புகார் கொடுத்தார்கள். சிவக்குமாரை விசாரிக்கும் போதுதான் அவனுடைய செல்போனில் இன்னொரு பெண்ணின் வீடியோவும் இருந்தது தெரியவந்தது.   அந்தப் பெண்ணின் முகம் அதில் சரியாகத் தெரியாததால் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. இதற்கென தனி டீம் அமைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

சிவக்குமாருக்கு வயது 26-தான். பாலக்கோடு விநாயகர்கோவில் தெருவைச் சேர்ந்தவன். டீச்சர் ட்ரெய்னிங் படிப்பைப் பாதியில் நிறுத்திய சிவக்குமார் திருப்பூரில் சிலகாலம் வேலை பார்த்திருக்கிறான். பின்பு, பாலக்கோட்டுக்கு வந்து டியூஷன் சென்டர் ஆரம்பித்து நடத்தி வந்திருக்கிறான். திருப்பூரில் இருக்கும்போது, ‘அந்த’ மாதிரியான படங்கள் அதிகமாகப் பார்த்ததாகவும் அதைப் பார்த்துதான் இப்படியெல்லாம் நடந்து கொண்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். வீடியோவை வெளியிட்ட அவனுடைய கூட்டாளி ஈஸ்வரனை கைதுசெய்திருக்கிறோம். இதே குற்றத்தில் ஈடுபட்ட இன்னொரு சிவக்குமாரை தேடி வருகிறோம்’’ என்றார்.

பாடம் படிக்கப்போன மாணவிகளை படம் எடுத்திருக்கிறான் இந்தப் பாவி.

- எம்.புண்ணியமூர்த்தி

பெற்றோர்களே உஷார்!

ங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பும்போது ஆசிரியரைப் பற்றித் தீர விசாரித்து அனுப்புங்கள். ஆசிரியரின் நடவடிக்கைகளை அடிக்கடி ஆராயுங்கள். `பிள்ளைகளை டியூஷனில் சேர்த்துவிட்டால்போதும்’ அதிக மதிப்பெண் வாங்கிவிடுவார்கள், என்று மேம்போக்காக நம்பிவிடாதீர்கள். டியூஷன் எடுக்கும் நபர் என்ன படித்திருக்கிறார், மாணவிகளிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையெல்லாம் முற்றாக அறிந்த பிறகு அனுப்புங்கள். குறிப்பாக, உங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுங்கள். அப்போதுதான் இதுபோன்ற சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும்.