Published:Updated:

கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. மகன் உள்ளிட்ட 9 பேர் கைது!

கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. மகன் உள்ளிட்ட 9 பேர் கைது!
கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. மகன் உள்ளிட்ட 9 பேர் கைது!
கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. மகன் உள்ளிட்ட 9 பேர் கைது!

மதுரை: மதுரை கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமியின் மகன் சுரேஷ் குமார் உள்ளிட்ட 9 பேர், மேலும் ஒரு புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் மீது மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிலத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ் குமார் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் மீது, மதுரை மாவட்ட காவல்துறையினர் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பி.ஆர்.பி.-யின் மகன் சுரேஷ் குமார் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

 சுரேஷ் குமார் உள்ளிட்ட நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

- குளஸ்