Published:Updated:

போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்

போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்

சங்கிலித்தொடர் கொலைகள்

புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான வி.எம்.சி.சிவக்குமார் பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் புதுச்சேரியே அரண்டுபோய்க் கிடக்கிறது. 

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த வி.எம்.சி.சிவக்குமார், புதுச்சேரி அரசில் வேளாண்மைத் துறை அமைச்சர், சபாநாயகர், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்குழுத் தலைவர், சாராய வாரியத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் இருந்த சிவக்குமாரை ஜனவரி 3-ம் தேதி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கொலைக்குப் பின்னால் ஒரு பெரிய ‘க்ரைம் ஸ்டோரி’யே இருக்கிறது.

போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்

இதுபற்றி உள்விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம். “திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய வியாபாரியான ராமுவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி வினோதா, இரண்டாவது மனைவி எழிலரசி. இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் இருந்துவந்தது. 2013-ம் ஆண்டு எழிலரசியுடன் டூவீலரில் சென்றுகொண்டிருந்த ராமுவை, வெட்டிப் படுகொலை செய்தது வினோதா அனுப்பிய கூலிப்படை. உயிர்தப்பிய எழிலரசி, தன் கணவரைக் கொன்றவரைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ராமு கொலை விவகாரத்தில், வி.எம்.சி.சிவக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 இந்த நிலையில், ராமு கொலையில் தொடர்புடைய அய்யப்பன் என்பவரை அதே வருடத்தில் வெட்டிக்கொன்றது எழிலரசி ஏவிய சூரக்கோட்டை ராஜா தலைமையிலான கூலிப்படை. உயிருக்குப் பயந்து சிங்கப்பூர் செல்ல வினோதா முடிவுசெய்தார். 2015-ம் ஆண்டு, சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்த வினோதாவை, சீர்காழி பைபாஸ் ரோட்டில் காரை வழிமறித்து படுகொலை செய்தது காஞ்சிபுரம் ரஞ்சித் தலைமையிலான கூலிப்படை. இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழிலரசி உடனடியாக ஜாமீனிலும் வெளிவந்துவிட்டார். அதன்பிறகு, சிவக்குமாரைத் தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார் எழிலரசி” என்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்

வி.எம்.சி. சிவக்குமார், காரைக்கால் அருகே நிரவியில் திருமணமண்டபம் கட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்வையிட கடந்த 3-ம் தேதி காலை 11.45 மணிக்கு அங்கு சென்றுள்ளார். அங்கு கட்டுமானப் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். காரைவிட்டு இறங்கி உள்ளே சென்ற சிவக்குமார், நாற்காலியில் அமர்ந்துவிட்டு, தண்ணீர் பாட்டில் எடுத்து வருமாறு டிரைவரிடம் சொல்லி உள்ளார். டிரைவரும் துப்பாக்கி ஏந்திய காவலர் பிரேம்நாத்தும் கார் அருகே வந்துள்ளனர். அப்போது, 7 பேர் கொண்ட ஒரு கும்பல் மூன்று டூவீலர்களில் வந்து மோதி விழுவதுபோல் டூவீலரை கீழே சரித்துள்ளனர். பிரேம்நாத் சுதாரிப்பதற்குள் கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். குண்டுவெடித்ததால் புகைமூட்டம் ஏற்பட்டது. காவலரின் கழுத்தில் அரிவாளைவைத்து மிரட்டி துப்பாக்கியைப் பறித்துள்ளனர். பிறகு, இரண்டு பேர் வெளியே காவல் இருக்க, கட்டடத்தின் உள்ளே புகுந்த ஐந்து பேரில் இருவர், அங்கிருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளனர். பிறகு சிவக்குமார் மீது வெடிகுண்டை வீசியுள்ளனர். அது வெடிக்கவில்லை. உடனே, அரிவாளால் அவரை வெட்ட முயன்றனர். நாற்காலியால் அவர் தடுக்க முயற்சித்துள்ளார். ஆனாலும், அவர் தலை மீது வெட்டு விழுந்தது. தலையைப் பிளந்ததோடு, முகத்தையும் கோரமாய் சிதைத்துவிட்டு அவர்கள் தப்பியிருக்கிறார்கள். போகிற வழியிலேயே சிவக்குமாருக்கு சொந்தமான கணேஷ் ஒயின்ஸ் ஷாப்பிலும் இரண்டு குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். வெடிகுண்டுகளை வீசியவர்கள் புதுவை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் என்றும், வீச்சரிவாளால் வெட்டிச் சாய்த்த கும்பல் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“வினோதாவுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை, சிவக்குமார் எழுதி வாங்கிக்கொண்டார். அதனால் எழிலரசிக்கு சொத்து கிடைக்காமல் போனது. அதில் ஏற்பட்ட விரோதம்தான் இந்தக் கொலைக்குக் காரணம்” என்கிறார்கள்.

போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்
போலீஸ் இருந்தும்... போட்டுத் தள்ளினார்கள்! - சங்கிலித்தொடர் கொலைகள்

இந்தச் சம்பவம் குறித்து காரைக்கால் சீனியர் எஸ்.பி-யான சந்திரனிடம் கேட்டபோது, “ராமு குரூப், அவர் மனைவி வினோதா குரூப் என இரண்டுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் மோதலில்தான் வி.எம்.சி. சிவக்குமாரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு எழிலரசி ஏவிய கூலிப்படையினர் 7 பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்” என்றார்.

இதற்கிடையில், எழிலரசியின் சபதம் முழுவதுமாக நிறைவேறவில்லை என்றும், அவரது கொலைப்பட்டியலில் இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன என்றும் ஒரு குரூப் திகில் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்