Published:Updated:

கப்சா விட்ட மாஜி மந்திரி!

பட்டம் வாங்காமலேயே 'பி.ஏ.'ன்னு போட்டவர்தானே அவர்!''

##~##
கப்சா விட்ட மாஜி மந்திரி!

ள் மாறாட்ட விவகாரத்தில் சிக்கி, தமிழகக் காவல் துறையினர் கண்ணில் மண் தூவிக்கொண்டு இருக்கும் புதுவைக் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், இப்போது பதவியில் இருந்து தூக்கப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் புதுவை மக்களின்... குறிப்பாக மாணவர் கள் மற்றும் ஆசிரியர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ரவுண்ட் அடித்தோம்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கப்சா விட்ட மாஜி மந்திரி!

ஆனந்த் (புதுவை சட்டக் கல்லூரி, மூன்றாம் ஆண்டு): ''சட்டப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஓர் அமைச்சர் இப்படிக் கீழ்த்தரமான ஒரு காரியம் செய்ததை, எங்களால் ஏற்கவே முடியவில்லை. உண்மையிலே அவர் தேர்வை நியாயமான முறையில் எழுத நினைத்து இருந்தால், புதுவையில் எழுதி இருக்கலாம். எதற்காகத் திண்டிவனத்தைத் தேர்வு செய்யணும்? எதற்காக ஆசிரியர் ஆதவனின் முகவரியை, அவருடைய முகவரியாகக் கொடுத்தார்? கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்துவதற்காக பணத்தைத் தண்ணீராக செலவழிக்கி றார்கள். இது சரி அல்ல. அவரைப் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் போதாது, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

ரஞ்சித் (பாலிடெக்னிக் மாணவர் மூன்றாம் ஆண்டு):

''கல்வித் துறை அமைச்சராக கல்யாண சுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தபோதே, தலையில் அடிச்சுக்கிட்டோம். ஏனென்றால், 8-ம் வகுப்பு ஃபெயி லானவர், ஐந்து கிரிமினல் வழக்கு கள் உள்ளவர், ஹோட்டலில் காபரே டான்ஸ் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பட்டப் படிப்பு படிக்காமலே, கல்யாணப் பத்திரிகையில் பி.ஏ., என்று போட்டுக்கொண்டவர். இப்படிப் பட்ட ஒருவரை 'தவறான’ காரியங்கள் செய்வதற்கு ஒத்தாசையாகத்தான் முதல்வர் வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

கப்சா விட்ட மாஜி மந்திரி!

பகத்சிங் (முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம்) :

80 சதவிகிதம் படித்தவர்கள் நிரம்பியுள்ள புதுவையில், 8-ஆம் வகுப்பு முடிக்காத ஒருவரைக் கல்வி அமைச்சர் ஆக்கியது கொடுமை. ரங்கசாமி மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரவுடிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும்தான் இந்த ஆட்சியில் மரியாதை இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட ஜெயராமன் விவகாரத்தில் கல்யாணசுந்தரத்துக்கு தொடர்பு இருப்பதாகச் சொல் கிறார்கள். இதுகுறித்தும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும்!''

சிந்து (பி.காம் முதலாம் ஆண்டு, பாரதிதாசன் கல்லூரி) :

''ஒரு மாணவர் பிட் அடித்தாலோ, ஆள் மாறாட்டம் செய்தாலோ, அவர் களுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும். இதே தவறினை ஒரு கல்வி அமைச்சர் செய்திருக்கிறார் என்றால், தண்டனை எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும்? அவர் மீது தவறு இல்லை என்றால், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்து இருக்கலாமே? எதற்காக ஓடி ஒளிகிறார்? பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மாணவர்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமோ, திட்டமோ நிறைவேற்றவே இல்லை. அமைச்சர் செய்த காரியத்தால் புதுச்சேரியில் இருக்கும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் அதிருப்தியில் தலை குனிந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்த, முதல்வர் ரங்கசாமி இந்தத் தோல்விக்கும் அவமானத்துக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும்!''

ஜெயராமன் (நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, ஆசிரியர் சங்கத் தலைவர்) :

புதுச்சேரி மாநிலத்துக்கு என்று நேரு காலத்தில் இருந்து ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாகச் சொல்லப்படும் கல்யாணசுந்தரம், இதுவரை ஏன் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை? கல்வித் துறைக்கு ஒரு இளையவர் அமைச்சராகிறார் என்றதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன், ஆனால் இப்போது அவமானமாக இருக்கிறது. அந்தந்தத் துறைக்கு  ஏற்றவர்களைத் தேர்ந்து எடுத்தால், எதிர்காலத்திலாவது இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்!''       

கப்சா விட்ட மாஜி மந்திரி!

ராம்ஜி (பெற்றோர் - ஆசிரியர் சங்கம்) :

''அவர் படித்தாரா, படிக்கவில்லையா என்பது முக்கியம் அல்ல. காமராஜர் படிக்காமலே பல சாதனைகள் செய்த வர்தான். ஆனால், ஒருவருக்குத் தனிமனித ஒழுக்கம் முக்கியம். 16 சட்டமன்ற உறுப்பினர்கள்கொண்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கிவிட்டால், கட்சிக்குக் கெட்ட பெயர், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முதல்வர் இவ்வளவு காலம் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஆகியிருக்கலாம். அடுத்து வருபவராவது பெற்றோர்கள் மனம் புரிந்து கல்வித் துறை மீது கவனம் செலுத்துபவராக வரட்டும்!''

சரவணன் (விவசாயி , பாகூர் பகுதி):

''கல்வித் துறை அமைச்சரே இப்படி ஆள்மாறாட்டம் பண்ணுவார்னு எதிர்பார்க்கலை. சமூகக் குற்றங்கள் செய்தவரைக் கட்சியில் சேர்த்து, அமைச்சர் பதவியும் கொடுத்த ரங்கசாமி, இப்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சரியில்லைன்னுதான் என்.ஆர். காங்கிர ஸுக்கு ஓட்டுப் போட்டோம். இவங்க அதைவிட மோசமாக இருக்கிறார்கள். உடனே ரங்கசாமி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சி கானல் நீர் போன்று மறைந்தேபோகும்!''

- நா.இள. அறவாழி

ஆ.நந்தகுமார்