Published:Updated:

ராஜீவ் கொலை நடந்த போது எங்கே இருந்தீர்கள்?

வேலூரில் விசாரணை நடத்திய ஜெத்மலானி!

##~##

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காண, அவ்வப்போது வைகோ முதல் சீமான் வரை பலர், வேலூர் மத்திய சிறைக்கு வந்து போவார்கள். ஆனால், பலரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த 12- தேதி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சிறைக்கு வர... அனைவரும் புருவத்தை உயர்த்தி இருக்கிறார்கள்! 

' அனைத்து இந்திய சாய்பாபா பக்தர்கள் மாநாடு’ வேலூரில் கடந்த 12, 13 தேதிகளில் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த கலைவாணன், இந்த மாநாட்டில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராஜீவ் கொலை நடந்த போது எங்கே இருந்தீர்கள்?

ராம்ஜெத்மலானி கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதற்கு ஜெத்மலானியும் சம்மதித்தார். அதன்படி, கடந்த 12-ம் தேதி காலையில்  மாநாட்டைத் துவக்கிவைத்தார் ராம்ஜெத்மலானி. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூருக்கு வந்து, 'ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தாங்கள் சந்திக்க வேண்டும்’ என ராம் ஜெத் மலானியிடம் கோரிக்கை வைக்க... 12-ம் தேதி சிறைக்கு வந்து மூவரையும் சந்தித்துப் பேசினார் ஜெத்மலானி.

எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வேலூர் சிறையில், அன்று அளவுக்கு அதிகமான பாதுகாப்பு. ராம்ஜெத்மலானி மற்றும் வைகோ உள்பட்டவர்கள் சிறைக்குள் சென்று சுமார் 12 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களிடம் ராம்ஜெத்மலானி அதிகமாகப் பேசவில்லை. ''மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் அப்பாவிகள், நிச்சயமாக அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன். மற்றபடி என் தொழில் தர்மத்தை மீறி என்னால் எதுவும் பேச இயலாது, நான் இங்கு வந்ததற்கு முக்கியக் காரணம் வைகோதான்!'' என்று மட்டும் அவர் சொல்ல... நிருபர்கள் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தனர். ராம்ஜெத்மலானியோ புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு சென்னைக்குக் கிளம்பினார்.

''சிறைக்கு உள்ளே என்ன நடந்தது?'' என்று வைகோவிடம் கேட்டோம். ''கிட்டத்தட்ட 21 வருடங்களாக சிறையில் தவிக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். அவர் நம் தம்பி களிடம் பொறுமையாகப் பேசினார். 'ராஜீவ் காந்தி

ராஜீவ் கொலை நடந்த போது எங்கே இருந்தீர்கள்?

படுகொலையான சமயத்தில், நீங்கள் மூவரும் எங்கே இருந்தீர்கள்?’ என அவர் கேட்க, பேரறிவாளன்... 'சினிமாவுக்குச் சென்றதாகவும், மற்ற இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்களது சொந்த வேலைகளில் இருந்ததாகவும்’ கூறினர். பிறகு நான், 'பேரறிவாளன் ஒரு பேராசிரியர்’ என ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். முருகனின் ஓவியக் கலையையும், சாந்தனின் எழுத்தாக்கங்களையும் சொன்னேன். அவர்களின் திறமைகளைக் கண்டு ஜெத்மலானி ஆச்சர்யப்பட்டார். சிறைக் கைதிகள் அனைவருக்கும் இவர்கள் மூவரின் மீது உள்ள அன்பையும் பாசத்தையும் புரிந்துகொண்டார். சிறையில் உள்ள மற்றக் கைதிகளுக்கு ஓர் ஆசிரியராகப் பாடங்கள் சொல்லித் தரும் பேரறி வாளனைப் பாராட்டினார். உச்ச நீதிமன்றத்தில், பஞ்சாபைச் சேர்ந்த பக்கர் வழக்கை வாதாடி வருவதை யும், அந்த வழக்கைவிட உங்கள் மீது போட்ட பொய் வழக்கு மிகவும் சுலபமானது, எனவே, உங்களை விடுவிப் பது எனது பொறுப்பு என தைரியம் ஊட்டினார். வழக்கு குறித்த கேள்விகளை மூவரிடமும் தனித் தனியாகப் பேசினார். சிறை அதிகாரிகளும் அவர்கள் மீது பற்றுவைத்து இருப்பதைப் புரிந்துகொண்டார். சென்னைக்கு காரில் திரும்பும்போது என்னிடம் ராம்ஜெத்மலானி சிரித்துக்கொண்டே, 'மூவரும் நிரபராதிகள் என நிரூபிப்பது எனது வேலை. நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள்’ என்றார். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் வந்தது, சிறையில் இருக்கும் தம்பிகளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்று மட்டும் நிச்சயம். உண்மையில், அவர்கள் அப்பாவிகள்'' என உணர்ச்சி வசப்பட்டார்.

சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ராம்ஜெத்மலானி பார்த்துச் சென்று இருப்பது, தமிழ் ஆர்வலர் களிடையே நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்