Published:Updated:

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

அதுதான் எலைட்...

##~##

ருக்கின்ற டாஸ்மாக் கடைகள் போ​தாது என்று புதிதாக 'எலைட்’ மதுபானக் கடைகளை அறிமுகப்படுத்தப்போகிறது தமிழக அரசு. எலைட் - பணக்காரக் 'குடி’மகன்களுக்காக உயர் ரக மற்றும் வெளி​நாட்டு இறக்குமதி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை.. 

கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு, மது விற்பனையைத் தனது கையில் எடுத்ததில் இருந்தே அதற்கு நல்ல வருமானம்தான். 2004-05-ல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

6,000 கோடி வருவாய் கிடைத்தது. 2010-11-ல், இது

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

14 ஆயிரம் கோடியைத் தாண்டியது. வரும் ஆண்டில்

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

16 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னையில் எட்டு, சேலத்தில் ஒன்பது, கோவையில் 16, மதுரை, திருச்சியில் தலா 12, என மொத்தம் 57 எலைட் மதுபானக் கடைகளைத் திறக்க இருக்கிறது தமிழக அரசு. இங்கு 'காட்ஸ்’, 'ஸ்காட்ச்’, 'பாரடைஸ்’, 'போல்ஸ்’, 'வின்டேஜ்’ உள்ளிட்ட விலை உயர்ந்த உயர் ரக மது பானங்கள் விற்பனை செய்யப்படும். குவாட்டர் பாட்டிலின் விலை குறைந்தபட்சம்

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

200; ஃபுல் பாட்​டிலின் விலை குறைந்தபட்சம்

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

2,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

ரசாயன மது பானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கள் வடிக்க அனுமதி தரக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தும் தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமியிடம் பேசினோம். ''ஏற்கெனவே, தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் சமூகத்தை நாறடிக்கின்றன. பள்ளிக் குழந்தைகள்கூட மதுவைப் பழகிவிட்டனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போல பல இடங்களில் வீட்டுக்கு வீடு மது பாட்டில் களை விநியோகித்​தனர். இதில் பல பெண்களும்கூட குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.இது போதாது என்று இப்போது எலைட்.அதாவது, மேட்டுக்குடி வர்க்கத்துக்கு ஒரு கடை; இல்லாதவருக்கு ஒரு கடை. ஏற்கெனவே, நாட்டில் நடக்கும் டாஸ்மாக் மோதல்களுக்கு இடையே இப்போது இன்னொரு மோதலாக இது வர்க்கப் பேதத்தை உருவாக்கும். நாங்கள் மது விலக்கு கோரவில்லை

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

என்றாலும், ஓர் அரசின் கொள்கை மதுவிலக்கு நோக்கியே இருக்க வேண்டும். அதுவே மக்களுக்கான அரசு. ஆனால், தமிழக அரசு தனது சொந்த மக்களையே கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாய்ஸன் கொடுத்துக் கொல்கிறது. ரஷ்யாவில் உருளைக்கிழங்கில் வோட்கா, சீனாவில் அரிசியில் மவுத்தாய், ஜப்பானில் அரிசியில் சாக்கே, ஸ்காட்லாந்தில் தானியங்களில் ஸ்காட்ச், பிரான்ஸில் திராட்சையில் ஷாம்பெய்ன் என விதம் விதமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் டாஸ்மாக் மது பானங்களை சர்க்கரை ஆலை ரசாயனக் கழிவான மொலாஸஸில் மது தயாரிக்கிறார்கள். அதில் கலக்கப்படும் எரிசாராயத்தால் குடல் வெந்து சாகிறான் தமிழன்!

டாஸ்மாக் மதுபானங்களில் இவ்வளவு கேடு இருப்பதால்தான், உயர்தட்டு மக்களுக்காக எலைட்

இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!

மதுபானக் கடைகளைத் தமிழக அரசு திறக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது, ஏழைகள் லோக்கல் சரக்கைக் குடித்துவிட்டுச் சாகட்டும். வசதியானவர்கள் மட்டும் தானியங்களாலும் பழ வகையாலும் தயாரிக்கப்பட்டவற்றைக்  குடித்துவிட்டு நன்றாக இருக்கட்டும். இதுதான் தமிழக அரசின் கொள்கை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு டாஸ்மாக்கும் தேவை இல்லை; எலைட்டும் தேவை இல்லை. ஏழை, பணக்காரன் என எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களைக்கொண்டு உலகத் தரம் வாய்ந்த, உடல் நலத்துக்குக் கேடு இல்லாத மது பானங்களை அரசு தயாரிக்க வேண்டும். இலங்கை அரசின் பனை, தென்னை மது பானங்கள், இன்று உலகில் பல்வேறு விமான நிலையங்களிலும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி எங்காவது டாஸ்மாக் மதுபானத்தை இவர்களால் விற்பனை செய்ய முடியுமா? எனவே, அரசு தனது கொள்கை முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்...'' என்கிறார்.

ஆனால், இன்னொரு தரப்பினரோ, ''வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை டாஸ்மாக் கடைகள் அளிப்பது இல்லை. பார்களில் கால்வைக்க முடியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. அதிக விலைக்கு விற்பது, கேட்கும் மதுபானத்தைக் கொடுக்காமல் இருப்பது என நுகர்வோருக்கு உரிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள். இந்த நிலையில், எலைட் மதுபானக் கடைகள் வருகை நியாயமானதே...'' என்கிறார்கள்.

டாஸ்மாக் அதிகாரிகளோ, ''இது அரசின் கொள்கை முடிவு. அதை செயல்படுத்துவது எங்கள் கடமை'' என்கிறார்கள் சின்​சியராக!

இப்படி ஆயிரம் நியாயங்களைக் கற்பித்தாலும், தமிழக அரசின் டாஸ்மாக் கொள்கைகளைப் பார்க்கும்போது, 'இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியும் போகட்டும்’ என்ற நினைப்பில் இருக்கிறார்களோ என்னவோ!

- டி.எல்.சஞ்சீவிகுமார்