Published:Updated:

ராம் சிங் தற்கொலை: டெல்லி மாணவியின் சகோதரர் கருத்து

ராம் சிங் தற்கொலை: டெல்லி மாணவியின் சகோதரர் கருத்து
ராம் சிங் தற்கொலை: டெல்லி மாணவியின் சகோதரர் கருத்து
ராம் சிங் தற்கொலை: டெல்லி மாணவியின் சகோதரர் கருத்து

புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரை வெளிப்படையாக தூக்கில் போட்டிருக்க வேண்டும் என்று அம்மாணவியின் சகோதரர் கூறியுள்ளார்.

இது குறித்து மாணவியின் சகோதரர் அளித்த பேட்டியில், "எப்படியும் சாகப் போகிறோம் என்பது ராம் சிங்குக்கு தெரியும். ஏனெனில் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் வலுவாக உள்ளன. அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து நான் பரவசம் அடையவில்லை. அவரை பொது மக்கள் முன்பு வெளிப்படையாக தூக்கில் போட்டிருக்க வேண்டும்" என்றார்.
 
4 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

##~~##
இதனிடையே டெல்லி மாணவி பாலியல் வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளி ராம்சிங் தற்கொலை செய்திருப்பது மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ்சிங், பவன், அக்சய், வினய் ஆகியோரிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தீவிர கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க