Published:Updated:

7 வயது சிறுமியை கற்பழித்த என்ஜினியரிங் மாணவன் கைது

Vikatan Correspondent
7 வயது சிறுமியை கற்பழித்த என்ஜினியரிங் மாணவன் கைது
7 வயது சிறுமியை கற்பழித்த என்ஜினியரிங் மாணவன் கைது
7 வயது சிறுமியை கற்பழித்த என்ஜினியரிங் மாணவன் கைது

ஸ்ரீபெரும்புதூர்: 7 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினியரிங் மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற என்ஜினியரிங் கல்லூரி மாணவர், அவரது வீடு அருகே உள்ள வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

நேற்று மாலை வழக்கம் போல அந்த வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டில் 7 வயது பெண் குழந்தை மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. வெளியில் சென்றிருந்த பெற்றோர் வந்த போது, ரமேஷ் வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை அந்த குழந்தைக்கு திடீரென்று காய்ச்சல் அடித்தது. எழுந்து நடக்க முடியவில்லை. சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி எடுப்பதாக கூறி அந்த குழந்தை அழுதது. இதையடுத்து டாக்டரிடம் குழந்தையை கொண்டு சென்றனர்.

##~~##
குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தையின் பிறப்புறுப்பில் பெரிய அளவில் காயம் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை வீட்டுக்கு வந்து சென்ற பக்கத்து வீட்டு வாலிபர் மீது சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததை அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
அந்த என்ஜினியரிங் மாணவனுக்கு 17 வயதுதான் என்பதால் எந்த சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுப்பது என்று போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.