Published:Updated:

சர்வேயர், இடைத்தரகரை சிறைக்குத் தள்ளிய 1,000 ரூபாய்!

சர்வேயர், இடைத்தரகரை சிறைக்குத் தள்ளிய 1,000 ரூபாய்!
சர்வேயர், இடைத்தரகரை சிறைக்குத் தள்ளிய 1,000 ரூபாய்!

சர்வேயர், இடைத்தரகரை சிறைக்குத் தள்ளிய 1,000 ரூபாய்!

தமிழ்நாட்டில் பொதுமக்கள் தனி பட்டா பெறுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. தனி பட்டா கேட்டு விண்ணப்பம் செய்பவர்களை, வருவாய்த்துறை மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் பல மாதங்கள் அலைக்கழிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும் தொகையை லஞ்சமாகப் பெறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் சர்வேயராகப் பணியாற்றிய பாலசுப்ரமணியன் லஞ்சம் பெற்ற வழக்கில்
2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சம்பவம் இப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வேயர் பாலசுப்ரமணியனுக்கும் இடைத் தரகராகச் செயல்பட்டவருக்கும் சிறைத்தண்டனை வழங்கி கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2014-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த ஜெரால்டு பிராங்க்ளின் தன் தாயார் பெயரில் உள்ள நிலத்தை அளந்து தனி பட்டா வழங்குமாறு பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு செங்கிப்பட்டி சர்வேயர் பாலசுப்ரமணியனுக்கு உத்தரவிடப்பட்டிக்கிறது. 1,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் நிலத்தை அளந்து தனி பட்டா வழங்குவோம் எனச் சர்வேயர் பாலசுப்ரமணியன் கூறியதாகத் தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் ஜெரால்டு பிராங்களின் புகார் அளித்திருக்கிறார்.

பாலசுப்ரமணியனை ஆதாரங்களோடு பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்தனர். 22.7.2014 அன்று ஜெரால்டு பிராங்க்ளின், 1,000 ரூபாயைப் பாலசுப்ரமணியனிடம் கொடுத்துள்ளார். அவர் அதை வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பாலசுப்ரமணியனையும் இடைத்தரகராகச் செயல்பட்ட கர்ணன் என்பவரையும் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த கட்டுரைக்கு