Published:Updated:

மாணவியை கர்ப்பமாக்கிய தலைமையாசிரியர்

Vikatan Correspondent
மாணவியை கர்ப்பமாக்கிய தலைமையாசிரியர்
மாணவியை கர்ப்பமாக்கிய தலைமையாசிரியர்
மாணவியை கர்ப்பமாக்கிய தலைமையாசிரியர்

ஆண்டிபட்டி: வேலியே பயிரை மேய்ந்த, கதையாக 10ஆம் வகுப்பு மாணவியை உதவி தலைமையாசிரியர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அரசு உதவி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருபவர் ரேவதி (15, பெயர் மாற்றம்). இதே பள்ளியில் உதவி தலையாசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகசுந்தரம்.

மாணவி ரேவதியிடம் ஆசை வார்த்தை கூறி ஆசிரியர் சண்முகசுந்தரம் அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் விளையாக மாணவி ரேவதி கர்ப்பம் தரித்தார்.
இதனை பெற்றோரிடம் தெரிவிக்காமல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார் ரேவதி. கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதான் தீரும் என்ற பழமொழி போல ரேவதி கதை ஆகிவிட்டது.

##~~##
3 மாதம் ஆனதால் மாணவி ரேவதி வயிறு பெரிதாக தெரிய ஆரம்பித்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ரேவதியிடம் கேட்டுள்ளனர். இதற்கு மேல் மறைக்க முடியாது என்று நினைத்த ரேவதி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினார்.
"தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கியது எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம்தான்" என்று மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் ஆண்டிபட்டி காவல்துறையி்ல் புகார் அளி்த்தார். இந்த புகாரின்பேரில் உதவி தலைமையாசிரியர் சண்முகசுந்தரத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை உதவி தலைமையாசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து 3 மாத கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிய‌டைய‌ வைத்துள்ளது.
சண்.சரவணகுமார்