ஒருபுறம் பெண் குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களது பாதுகாப்புக்காகவும் பல்வேறு நலத் திட்டங்கள் நாட்டில் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. இந்த நிலையில், அவற்றின் ஒட்டுமொத்த நோக்கத்தையே அடித்து நொறுக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில், கருக்கலைப்பு செய்யப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அந்த மாநில அரசை மட்டுமல்லாது, மத்திய அரசையும் அதிரவைத்துள்ளது.

மும்பையிலிருந்து சுமார் 375 கி.மீ. தொலைவில் உள்ளது சாங்லி மாவட்டம். இந்த மாவட்டத்துக் குட்பட்ட மீரஜ் தாலுகா, மைஷால் என்ற கிராமத்தில், பெண் ஒருவர் கருக்கலைப்புக்குப் பின் மரணமடைந்தது தொடர்பான வழக்கை விசாரிக்கச் சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த ஹோமியோபதி மருத்துவமனையின் மருத்துவர், கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான பெண் சிசுக்களைக் கலைத்து, அவற்றை மருத்துவமனையின் அருகிலுள்ள நீரோடையில் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது கருக்கலைப்பு செய்யப்பட்ட ஒன்றிரண்டு சிசுக்கள் அந்த ஓடை அருகே, கிடப்பதைப் பார்த்து அதிர்ந்த போலீஸார், தொடர்ந்து அங்கு பொக்லைன் எந்திரத்துடன் தோண்டியபோது, தோண்டத்தோண்ட வந்துகொண்டே இருந்தன கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுக்கள். அத்தனையும் 14 பெரிய பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்தன. இவற்றில் சில அரைகுறையாக எரிக்கப்பட்டும், தொப்புள் கொடியுடனும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் பதைபதைக்க வைப்பவை.

“மைஷால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாம்தேடா பிரவின். இவரது மனைவி சுவாதி. இந்த தம்பதியருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், 26 வயதாகும் சுவாதி மூன்றாவதாக கர்ப்பம் ஆனார். அவரது வயிற்றில் பெண் சிசு வளர்வதை, அந்தப் பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்திவந்த டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே கண்டறிந்து, பிரவினிடம் தெரியப்படுத்தினார்.

டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே, ஒரு ஹோமி யோபதி மருத்துவர். இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைக்காட்டிலும் சட்ட விரோதமாக கருவில் வளரும் சிசுவை அது ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வது, பெண் சிசு வேண்டாம் என்றால் அந்தக் கருவைக் கலைப்பது என அலோபதி மருத்துவர்களே செய்யத்தயங்கும் செயல்களை எவ்வித பயமுமின்றி செய்துவந்துள்ளார். இவர், பிரவினிடம் அவரது மனைவியின் வயிற்றில் வளர்வது பெண் சிசு என்று சொன்னதைத் தொடர்ந்து. மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத பிரவின், அதனைக் கலைக்குமாறு சொன்னபோது, சுவாதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதனை பொருட்படுத்தாத பிரவின், தனது மனைவியின் கருவைக் கலைக்குமாறு மருத்துவர் பாலாசாகேப் கித்ரபுரேவிடம் கூற, அவரும் கடந்த மார்ச் 1-ம் தேதியன்று சுவாதிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது கர்ப்பப்பை சேதமடைந்து அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு, சுவாதியின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவர், அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே பிரவின் அவசர அவசரமாக தனது மனைவியின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளார். அந்தப் பகுதி மக்கள், இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சுவாதியின் தந்தை ஜாதவும் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து போலீஸார், சுவாதியின் சடலத்தை கைப்பற்றி, அதனைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், அதற்கு முன்னரே மருத்துவர் கித்ரபுரே தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து போலீஸார் மருத்துவ மனையின் ஒவ்வொரு அறையினுள்ளும் புகுந்து அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆபரேஷன் தியேட்டர், டெலிவரி ரூமில் இருந்த மருத்துவக்கருவிகள் மற்றும் எக்ஸ்ரே மெஷின், சிகிச்சைக்கு வந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பதிவேடு ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றினர். மேலும் கருக்கலைப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட மருந்து மாத்திரைகளையும் போலீஸார் கைப்பற்றினர்.

கித்ரபுரே மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருமே ஹோமியோபதி மருத்துவர்கள். இதுபோன்ற கருக்கலைப்பு போன்ற அறுவைச் சிகிச்சை செய்வதற்கு இவர்களுக்குச் சட்டப்படி அனுமதி இல்லை. ஆனாலும் சட்டவிரோதமாக அதனைச் செய்து வந்துள்ளனர்” என்று தெரிவித்தார் இவ்வழக்கை விசாரித்த சாங்லி மாவட்ட போலீஸ் எஸ்.பி. தத்தாத்ரே ஷிண்டே.

அவரே, “ஹோமியோபதி மருத்துவப் படிப்பை கித்ரபுரே தம்பதியர் எங்கு படித்தார்கள் என்பது குறித்தும் நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மருத்துவமனையின் அருகே உள்ள ஓடையில் கைப்பற்றப்பட்ட சிசுக்கள் நிச்சயம், பெண் சிசுக்களாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் அவற்றின் பாலினத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அவை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

கித்ரபுரேவின் மருத்துவமனையில் சோதனை நடத்தியபோது, மேசை டிராயர்களில்கூட கருக்கலைப்பு செய்த அரைகுறையான சிசுக்கள் இருந்ததை கைப்பற்றினோம் என்ற அதிர்ச்சி தகவலையும் போலீஸார் தெரிவித்தனர். இந்த டுபாக்கூர் டாக்டர் கருக்கலைப்புக்கு ரூ.25,000 முதல் 50,000 வரை கட்டணமாக வசூலித்ததும் தெரியவந்துள்ளது.

கருக்கலைப்பில் உயிரிழந்த சுவாதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரு, கர்ப்பப்பையில் அல்லாமல் கருமுட்டைக் குழாயில் இடம் மாறி உருவாகி இருந்ததும், இதனால் கர்ப்பப்பையில் பிளவு ஏற்பட்டு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு, அதுவே சுவாதி மரணத்துக்கு வித்திட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை நடத்திய அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருக்கலைப்புச் சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக சுவாதியின் கணவர் பிரவின் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், கித்ரபுரே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட தீவிர வேட்டையில், கர்நாடக மாநிலம் பெல்காமில் பதுங்கி இருந்த கித்ரபுரே பிடிபட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத் துள்ளனர்.

கருக்கலைப்பு செய்து வந்த கித்ரபுரேவின் பாரதி மருத்துவமனை அமைந்திருப்பது மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் என்றாலும், அங்கிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலேயே கர்நாடகா எல்லை அமைந்துள்ளது. இதனால், இந்த மோசடியில் இரு மாநிலங்களில் உள்ள சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாரதி மருத்துவமனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், கருக்கலைப்புக்கு வந்த பெண்களில் பலர் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருத்துவமனைக்கு இன்னும் ஐந்து டாக்டர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்திருப்பதும், இதில் இரண்டு பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், இந்த சட்டவிரோத செயல் களில் இரு மாநிலங்களிலும் உள்ள பல டாக்டர்களுக்கும், சோனாலிஜிஸ்ட்ஸ் எனப்படும் கரு பாலினச் சோதனைச் செய்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும், இது ஒரு பெரிய நெட் ஒர்க்காக இயங்கி வந்திருக்கலாம் என்றும், இதற்கான ஏஜென்ட்களாக உள்ளூர் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சிலர் செயல்பட்டிருக்கலாம் என்றும் சாங்லி மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை கர்நாடக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ள தாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் தடுப்பதற்கான இருமாநில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளதாகவும் மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் ஸ்வந்த் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினக் கொண்டாட்டத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது இன்னும் தொடரும் இந்தப் பெண் சிசுக்கொலை சம்பவம்!

- பா.முகிலன்