Published:Updated:

முதலில் பகை... அடுத்து நண்பன்... 45 இடங்களில் குத்திக் கொல்லப்பட்ட ரவுடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்து கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் ஜெயந்த். இவர் அத்திப்பள்ளியை அடுத்துள்ள மாயசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெயந்த் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன. அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் ஜெயந்த் பெயர் உள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரடிவுயான சுனிலும், ஜெயந்த்தும் நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்களுக்குள் கடந்த ஆண்டு பணம் பங்கு பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இரண்டு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது. சில நாள்களுக்கு முன்புதான் இரண்டுபேரும் சமாதானம் ஆகியுள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஞாயிறு இரவு ஜெயந்த்தை சுனில் தரப்பு ஆட்கள் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு ஜெயந்த் வீடு திரும்பவில்லை. பதற்றம் ஆன ஜெயந்த் குடும்பத்தினர் அத்திப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சுனில் மீது புகார் கொடுத்துள்ளனர். அத்திப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்.ஒய்.ராஜேஷ் விசாரணை மேற்கொண்டபோது, தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜலட்டிகானப்பள்ளியை அடுத்துள்ள தைலந்தோப்பில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது ஜெயந்த் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். 45 இடங்களில் கத்திக்குத்து மற்றும் கண்ணாடி பாட்டிலால் உடலில் குத்தப்பட்டும் கை கால்கள் வெட்டப்பட்டும் இருந்தன. நண்பர்கள் ஆன பின்பும் பகைமை உணர்வுடன் இருந்த சுனில் தரப்பு சமயம் பார்த்து ஜெயந்த்தை காரில் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து உடலை தைலந்தோப்பில் வீசிச் சென்றுள்ளதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் சுனில் உட்பட மொத்தம் 7 பேருக்குத் தொடர்பு இருப்பதாக அத்திப்பள்ளி போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபல ரவுடியின் கொடூரக் கொலை சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.