Published:Updated:

வாணியம்பாடியில் பணத்துக்காக ப்ளஸ் 1 மாணவர் கடத்திக் கொலை

வாணியம்பாடியில் பணத்துக்காக ப்ளஸ் 1 மாணவர் கடத்திக் கொலை
வாணியம்பாடியில் பணத்துக்காக ப்ளஸ் 1 மாணவர் கடத்திக் கொலை
வாணியம்பாடியில் பணத்துக்காக ப்ளஸ் 1 மாணவர் கடத்திக் கொலை

வாணியம்பாடி: :வாணியம்பாடியில் பணத்துக்காக நண்பனையே கொலை செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளார்கள்.

வாணியம்பாடி அருகே ஆம்பூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். நகைக்கடை அதிபர். இவரது மகன் மணி. அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி மாலை டூ&விலரை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்ற மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மணியின் பெற்றோர் பல்வேறு இடங்களிலும் மகனை தேடி வந்த நிலையில், ரமேஷுக்கு போன் ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ‘மணியை நாங்கள் கடத்தி இருக்கிறோம். 80 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம்’ என்றார்.

தொடர்ந்து வாணியம்பாடி டவுன் போலீஸில் ரமேஷ் புகார் கொடுத்ததை அடுத்து, மணியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. மொபைல் போனில் பேசிய நபரின் சிக்னல்

##~~##
டவரை வைத்து போலீஸார் ஆய்வு நடத்தி தேடியதில், ஜெகன் என்பவர் பிடிபட்டார்.

போலீஸிடம் சென்றதால் பணம் கிடைக்காது; தாங்களும் மாட்டிக்கொள்வோம் என்பதால் மணியை கொன்று மின்னூரில் உள்ள கிணற்றில் வீசிவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்ததை கேட்டு மணியின் பெற்றோர் கதறி அழுதார்கள்.

வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் ஜெகன் மணியின் நண்பர் ஆவார். போலீஸார் ஜெகன் மற்றும் கூட்டாளிகள் எட்டு பேரை கைது செய்துள்ளார்கள்.