Published:Updated:

விழுப்புரம்: அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்; விஷம் அருந்தி தற்கொலையா... போலீஸ் விசாரணை!

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்து 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விழுப்புரம்: அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்; விஷம் அருந்தி தற்கொலையா... போலீஸ் விசாரணை!

அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்து 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், இன்று காலை சுமார் 10:30 மணி அளவில் வகுப்பறையில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உடனடியாக அந்த மாணவியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

பள்ளியில் போலீஸ் விசாரணை
பள்ளியில் போலீஸ் விசாரணை

அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் காணை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பள்ளி மாணவி விஷம் அருந்தி உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, ``மாம்பழப்பட்டு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி நேற்று முழுவதும் வீட்டில் சாப்பிடாமல் இருந்ததாகத் தெரிகிறது. இன்று காலை, வீட்டின் அருகே உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிய மாணவி, அதில் விஷத்தைக் கலந்து அருந்திவிட்டு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். விஷம் கலந்த குளிர்பானம் கொஞ்சம் அவரது பையிலேயே இருந்தது. மேலும் அவருடைய பையிலிருந்து சில கடிதங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றை ஆவணமாக வைத்திருக்கிறோம்.

காணை காவல் நிலையம்
காணை காவல் நிலையம்

புலன் விசாரணை நடைபெற்று வருவதால், அதைப்பற்றி கூறமுடியாது. முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்வோம். அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்