Published:Updated:

`தொடர் கனமழை... இடிந்து விழுந்த வீடுகள்..!’ - கோவையில் பெண்கள், குழந்தைகள் உட்பட13 பேர் பலி

மேட்டுப்பாளையம் நடூர் என்ற பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர்.

கோவை விபத்து
கோவை விபத்து

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு நாள்களாக நல்ல மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்துவருகிறது. மழையால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக, தொடர் மழையால், மேட்டுப்பாளையம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே அவுட் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

`தொடர் கனமழை... இடிந்து விழுந்த வீடுகள்..!’ - கோவையில் பெண்கள், குழந்தைகள் உட்பட13 பேர் பலி

இந்த விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்டவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவமழை!- 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

`தொடர் கனமழை... இடிந்து விழுந்த வீடுகள்..!’ - கோவையில் பெண்கள், குழந்தைகள் உட்பட13 பேர் பலி

மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சின்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். அதிகாலையில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.