Published:Updated:

உ.பி: ஒரு வயதுக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் வீசிக் கொன்ற 13 வயது சிறுவன் - என்ன நடந்தது?

குழந்தை

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதுக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் வீசிக் கொலைசெய்த 13 வயது சிறுவனை போலீஸார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

உ.பி: ஒரு வயதுக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் வீசிக் கொன்ற 13 வயது சிறுவன் - என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதுக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் வீசிக் கொலைசெய்த 13 வயது சிறுவனை போலீஸார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Published:Updated:
குழந்தை

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் ராகுல். அந்தப் பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரின் ஒரு வயது பெண் குழந்தை ரீத்து அவரது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை ரீத்துவின் சத்தம் கேட்காததால் சந்தேகமடைந்த கேசவ் ராகுல், வெளியே வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோதும் குழந்தை கிடைக்காததால், அலிகன்ஞ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறை
காவல்துறை

உடனே களத்தில் இறங்கிய காவல்துறை, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அருகிலிருக்கும் பள்ளி மைதானத்தில் ரீத்துவின் ஆடைகள் கிடைத்திருக்கின்றன. உடனே அந்தப் பள்ளியைச் சுற்றித் தேடிய காவல்துறை, இறுதியில் பள்ளியின் தண்ணீர்த் தொட்டியில் குழந்தை ரீத்துவை சடலமாக மீட்டனர். குழந்தையின் காலில் செங்கல் கட்டப்பட்டிருந்தது. இதனால், குழந்தை ரீத்து கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்த காவல்துறை, அது தொடர்பான தீவிர விசாரணையில் ஈடுபட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுவன்
சிறுவன்
கோப்புப் படம்

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அந்தப் பகுதியின் காவல் ஆணையர் செய்யது அலி அப்பாஸ், ``குழந்தை ரீத்து கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், கேசவ ராகுலின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் அருண்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 13 வயது சிறுவனின் பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டது. அதனால், அவனிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டோம். அப்போது அருண் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தண்ணீர் தொட்டி
தண்ணீர் தொட்டி
கோப்புப் படம்

சிறுவன் அருண், `கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு எனது சைக்கிளை கேசவ் ராகுலின் வீட்டு வாசலுக்கு அருகே நிறுத்தினேன். அதனால், ஆத்திரமடைந்த கேசவ் ராகுல் என்னைக் கன்னத்தில் அறைந்தார். மேலும், என் பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். என் கண்முன்னே என் பெற்றோரைத் திட்டியதால், எனக்குக் கடுமையான கோபம் வந்தது. எனவே, கேசவ ராகுலை பழிவாங்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படி, நேற்று ரீத்து வெளியே விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். உடனே, குழந்தையைத் தூக்கிச்சென்று உடைகளைக் களைந்து, தப்பித்து விடக்கூடாது என்பதற்காகக் கால்களில் செங்கல்லைக் கட்டி தண்ணீர்த் தொட்டியில் வீசினேன்' எனக் கூறினான்.

இதையடுத்து போலீஸார் அவனைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism