Published:Updated:

`வயிற்றில் ஏழு மாத சிசு; 13 வயது சிறுமி கொலை?! - கொடூர சித்தப்பாவுக்கு போலீஸ் வலை வீச்சு

சிறுமியைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட அவரின் சித்தப்பா செந்தில், வெளியே சென்று தனக்கு எதுவுமே தெரியாததுபோல உறவினர்களிடம் நாடகமாடியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கீரமங்கலத்தில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது, 10 அடிக்கும் மேல் உயரமுள்ள வீட்டு பூஜை அறை மேற்கூரையிலுள்ள கொக்கியில் நூல் கயிற்றைக் கட்டி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். இதைக் கண்ட சிறுமியின் சித்தப்பா செந்தில், பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியுடன் சிறுமியைக் கீழே இறக்கினார். ஆனால், அந்தச் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் கீரமங்கலம் காவல் நிலையத்துக்கும், கீரமங்கலம் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கீரமங்கலம் போலீஸார், மாணவியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்டமாக, தற்கொலை என்று வழக்கு பதிவு செய்தனர். இறந்துபோன சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமியின் தந்தை கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்துவருகிறார்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

தன் மகளை தாத்தா, சித்தப்பா செந்தில் அரவணைப்பில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். சிறுமி கீரமங்கலத்தில் படித்துவந்திருக்கிறார்.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், 13 வயது சிறுமியின் வயிற்றில் ஏழு மாத சிசு இறந்த நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து, குழந்தையை டி.என்.ஏ ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமியை அவரின் சித்தப்பா செந்தில் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதற்கிடையே செந்தில் தலைமறையாகியிருக்கிறார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருவதுடன் குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

`மார்டன் டிரெஸ் பெண்கள்தான் இவர்கள் டார்கெட்!' - பாலியல் சீண்டலோடு வழிப்பறியும் செய்த இளைஞர்கள்

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``சிறுமியைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட அவரின் சித்தப்பா செந்தில், வெளியே சென்று தனக்கு எதுவுமே தெரியாததுபோல உறவினர்களிடம் நாடகமாடியிருக்கிறார்.

டி.என்.ஏ முடிவு வர வேண்டும். டி.என்.ஏ முடிவுக்குப் பிறகுதான் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தாரா என்பது குறித்துத் தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு