Published:Updated:

பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் போலீஸில் சரண்!

பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் போலீஸில் சரண்!
பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் போலீஸில் சரண்!

பாவமன்னிப்பு கேட்கச் சென்ற திருமணமான இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிரியார் ஒருவர் போலீஸில் சரணடைந்தார்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த திருமணம் ஆன பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன்பு பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்த அந்தப் பெண் திருமணத்துக்குப் பின்பு, திருவல்லா மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கச் சென்றிருக்கிறார். அப்போது, செய்த தவறுகளை அவரின் கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பாதிரியார். அத்துடன் அவர்களின் நண்பர்களான நான்கு பாதிரியார்கள் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 5 பாதிரியார்களும் சபையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், திருமணமான இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் பி.மேத்யூ ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட பாதிரியார்கள் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், கோர்ட் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து பாதிரியார் ஜோப் மேத்யூ இன்று கொல்லம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.