

சென்னை:: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் நடத்திய ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஐ, எந்த தனிநபரையும் குறிவைத்து சோதனை நடத்தவில்லை என்று கூறியுள்ளது.
கார் இறக்குமதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக தமிழகத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய மறுநாளே இந்த சோதனை நடந்திருப்பதால், இது பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க கூடாது என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.இதேப்போன்று கமல்நாத்தும் கூறியிருந்தார்.இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், இந்த சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருந்தார்.
##~~## |