Published:Updated:

நாகர்கோவிலில் இரட்டைக் கொலை: பின்னணியில் குடும்ப உறவுகளா?

நாகர்கோவிலில் இரட்டைக் கொலை: பின்னணியில் குடும்ப உறவுகளா?
நாகர்கோவிலில் இரட்டைக் கொலை: பின்னணியில் குடும்ப உறவுகளா?

நாகர்கோவில்: நாகர்கோவிலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவரை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு குடும்ப உறவுகள் பின்னணியாக இருக்கலாமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நாகர்கோவிலில் இரட்டைக் கொலை: பின்னணியில் குடும்ப உறவுகளா?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராணித் தோட்டம் பகுதியில் வீடு எடுத்து மைதீன் ஷா மற்றும் ராணியும் தங்கி இருந்தனர். இதில் மைதீன் ஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் நாகர்கோவிலில் உள்ள மசாலா நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

ராணி, நாகர்கோவில் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக நட்பு இருந்து வந்தது. அது மெள்ள மெள்ள வளர்ந்து இருவரும் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வீடு எடுத்து தங்கும் அளவுக்குச் சென்றது. இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக ராணித் தாட்டம் பகுதியில் தங்கி இருந்தனர்.

நாகர்கோவிலில் இரட்டைக் கொலை: பின்னணியில் குடும்ப உறவுகளா?

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் இவர்கள் தங்கி இருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல், வாசலில் இருந்த வாட்ச்மேனை தாக்கிவிட்டு, மைதீன் ஷாவையும் ராணியையும் கதறக் கதற வெட்டிக் கொன்றனர். வீட்டு வாட்ச்மேன் கொடுத்த தகவலின்படி, ஸ்பாட்க்கு வந்த நேசமணி நகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
     

##~~##
இந்த விவகாரம் குறித்து விகடன் டாட் காம்மிற்காக காவல் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘மைதீன் ஷா குடும்பத்தினர் அவர் மீது மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். கட்டிய மனைவியை விட்டுவிட்டு, ஒரு கிறிஸ்தவப் பெண்ணோடு அவர் தனியாக இருந்ததால், அவர்கள் கோபப்பட்டு கூலிப் படையை ஏவி போட்டுத்தள்ளியிருக்கலாம். மைதீன் ஷாவும் ராணியும் பெரிய சம்பளத்தில் வேலைப் பார்க்கவில்லை. இருந்தும், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகையில் வீடு, வீட்டுக்கு வாட்ச்மேன் என வசதியாகவும், பாதுகாப்புடனும் வாழ வேண்டிய அவசியம் என்ன என்றும் விசாரித்து வருகிறோம். ஒருவேளை இவர்களுக்கு முன்னரே பலமுறை மிரட்டல்கள் வந்ததால்தான் பாதுகாப்புக் கருதி இப்படி ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கினார்களா என்றும் விசாரித்து வருகிறோம். விரைவில் கொலையாளியைப் பிடித்துவிடுவோம்’’ என்றனர்.
செய்தி. என்.சுவாமிநாதன்
படங்கள்: ரா.ராம்குமார்