Published:Updated:

அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபலமான உணவகத்தில் சாப்பிட வந்தவர், 25,00,000 ரூபாயை விட்டுச் சென்றார். சிசிடிவி காட்சிகள் இருந்தும் பணத்தை தவறவிட்டவரை 50 நாள்கள் கடந்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 

சென்னை அண்ணாநகரில் பிரபல சைவ உணவகம் உள்ளது. இங்கு கடந்த மே 31-ம் தேதி சாப்பிட வந்த ஒருவர், பையை தவறவிட்டார். உணவகத்தில் சர்வராக பணியாற்றிய ரவி, அந்தப் பையை எடுத்து மேலாளர் லோகநாதனிடம் கொடுத்தார். பையை திறந்து பார்த்தபோது, அதில் 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக 25,00,000 ரூபாய் இருப்பது தெரியவந்தது. பணப்பையை அண்ணாநகர் போலீஸாரிடம் உணவக மேலாளர் லோகநாதன் ஒப்படைத்தார். போலீஸார், பணத்தைத் தவற விட்டவர் யார் என்று விசாரித்தனர். இதற்காக உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், சாப்பிட்டுவிட்டு பில்லைக் கொடுக்கும் அந்த நபர், பணப்பை கீழே வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து செய்திகள் வெளியானபிறகும் பணத்தை தவறவிட்டவர், அதை போலீஸாரிடமிருந்து பெறவில்லை. இதனால், பணத்தை அரசு கருவூலத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். பணத்தை ஒப்படைத்த ரவியை நேரில் அழைத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார். இந்தச் சம்பவம் நடந்து 50 நாள்கள் கடந்தும் பணத்தை தவற விட்டவர் யார் என்று தெரியவில்லை. இதனால், 25,00,000 ரூபாய் குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பணத்தைத் தவற விட்டவரை போலீஸார் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதுபோல இதை வருமானவரித்துறையினரும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவரைக் கண்டறியலாம். ஆனால், கிணற்றில் போட்ட கல்லாகவே இந்தச் சம்பவம் உள்ளது. பணத்தை தவறவிட்டவர், அதற்குரிய வருமானவரி செலுத்தியிருந்தால் நிச்சயம் அதைப் பெற நடவடிக்கை எடுத்திருப்பார். இதனால் 25,00,000 ரூபாய் பண விவகாரத்துக்குப் பின் ஏதோ மர்மம் இருக்கிறது'' என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism