Published:Updated:

மு.க.அழகிரி பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

மு.க.அழகிரி பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
மு.க.அழகிரி பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
மு.க.அழகிரி பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சென்னை: சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பண்னை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட 19 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த சொகுசு கார்கள் இறக்கமதி செய்ததில் ரூ.50 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக கார் டீலர் அலெக்ஸ், வருவாய் புலனாய்வு அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

##~~##
அந்த கார்களை வாங்கியவர்கள் வீடுகளில்தான் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த வகை சொகுசு காரில் ஒரு காரை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர்.
இதேபோல் ஒரு விலை உயர்ந்த கார் மு.க.அழகிரி வீட்டிலும் இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், இன்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அங்கு கார்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.