பாரதியார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், பேராசிரியர் சுப்பையாவிடம் கேட்டார். ‘பல்கலைக்கழகத்துக்கு நிலமும், உங்கள் தலையீடு இல்லாத சூழலும் வேண்டும்’ என்றாராம். சிரித்தபடியே ஏற்றுக்கொண்டார் எம்.ஜி.ஆர். இன்று அதே அ.தி.மு.க ஆட்சியில் நிலைமை தலைகீழ். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் நடக்கும் ஊழல்களும், அரசியல் தலையீடுகளும் உயர்கல்வித்துறைக்குக் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் 19 பல்கலைக்கழகங்களும், இரண்டு மத்திய பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைக்கழகத்துக்கு துரைசாமியையும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லத்துரையையும் துணைவேந்தர்களாக நியமித்துள்ளார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஆனால், இவர்கள் மீது புகார்ப் பட்டியலை வாசிக்கின்றனர் கல்வியாளர்கள். பெயர், புகைப்படம் தவிர்த்துவிட்டு பேசத்தொடங்கினர்.

“ஊழலற்ற, சாதியற்ற, அரசியல் தலையீடற்ற கல்வியை மாணவர்களுக்குப் போதிப்பதே பல்கலைக்கழகத்தின் நோக்கம். ஆனால், அதன் துணைவேந்தர் நியமனம் சாதி, பணம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை ஒட்டியே தீர்மானிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற பேராசிரியர் சீனிவாசன் மீதான தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்லத்துரைதான் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக்கப் பட்டிருக்கிறார். 294(பி), 324, 109, 307 ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் அவர். முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு வேண்டப்பட்டவர்.அந்தச் செல்வாக்கில் பல்கலைக்கழகத்தில் இளைஞர் மேம்பாடு நடுவத்தில் இருந்துகொண்டு அதிகாரம் செய்துவந்தார். யூ.ஜி.சி விதிப்படி 10 ஆண்டுகள் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தவரே துணைவேந்தர் பதவிக்குத் தகுதியானவர். செல்லத்துரை, தொடக்கத்தில் பி.ஆர்.ஓ-வாக இருந்தார். இது ஆசிரியர் பணிக்கான கால அளவில் சேராது. பிறகு இளைஞர் மேம்பாட்டு நடுவத்தின் இயக்குநராக இருந்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்தபோது அப்போதைய துணைவேந்தர் பாலகிருஷ்ணனுடன் மோதினார். இவர்மீது நிர்வாக முறைகேடுகள் புகார் எழுந்தன. ஒன்றரை ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறி விட்டார். பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்குப் பதிவாளரானார். இவருக்கு கவர்னர் அலுவலகத்திலும், உயர்கல்வித் துறை அலுவலகத்திலும் உள்ள அதிகாரிகள் இருவர் சிபாரிசு செய்தனர். தென் மாவட்டத்தில் மணல் மற்றும் சிமென்ட் தொழிலில் கோலோச்சும் இரண்டு பெரு முதலாளிகள் இவருக்கான செலவுகளைப் பார்த்துக்கொண்டனர். கவர்னரின் பிரதிநிதியான கன்வீனர் முருகதாசும் தமது ‘சமுதாய’ பாசத்தில் செல்லத்துரைக்காகப் பேச, இவை அனைத்தும் ஒருங்கிணைந்தே செல்லத்துரையை துணைவேந்தராக நியமித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் போட்டியில் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த தேவராஜ், வேல்முருகன் போன்றவர்கள் முழுத் தகுதியோடு இருந்தனர். இவர்கள் சுமார் 50 முனைவர் பட்டதாரிகளைத் தங்கள் பணிக்காலத்தில் உருவாக்கியுள்ளார்கள். ஆனால், தமது செல்வாக்கின் மூலம் அவர்களை நேர்காணல் பட்டியலில் இடம் பெறாமல் செய்தார் இப்போது துணைவேந்தராகியிருக்கும் துரைசாமி. இவருக்கு ‘சமுதாய’ பாசத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரவும் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் போட்டியில் பேராசிரியர் மோகனுக்கு, மத்திய அரசிடம் செல்வாக்குள்ள ஒரு ‘ஆடிட்டர்’ சிபாரிசு செய்தார். பி.ஜே.பி சித்தாந்தத்தோடு இணைந்து போகின்றவர் என்பதால் ஏறக்குறைய கவர்னரின் ஆதரவும் இவருக்கே என்ற பேச்சும் வெளிப்பட்டது. பேராசிரியர் எபினேசருக்கு, பெரும் தொழிலதிபரான ‘மூன்றெழுத்து கான்ட்ராக்டர்’ பெரிய அளவில் ஸ்பான்சர் செய்தார். சமுதாய பாசத்தில் இவருக்கு முதல்வர் ஆதரவும் சேர்ந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் சமுதாயத்தைச் சார்ந்தவர் பேராசிரியர் கருணாமூர்த்தி. இந்த மூன்று பேருக்கும் மூன்று செல்வாக்கான நபர்களும் பரிந்துரை செய்ததால் தேர்வுக்கான பரிசீலனை நீண்ட நேரம் எடுத்தது. ஒருமித்த முடிவுக்கு வரமுடியாததால் பட்டியலைத் தள்ளுபடி செய்துவிட்டு, ‘புதிய தேடுதல் குழு மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்’ என உத்தரவிட்டுள்ளார் கவர்னர். பி.ஜே.பி பாசம் உள்ள ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள்தான் தாமதத்துக்கான காரணம்’’ என்றார்கள்.

“துணைவேந்தர் நியமிக்கப்படாமல் பணிகள் முடங்கிக்கிடப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கும். ஊழலற்ற, நேர்மையான துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் அருளறம்.

‘‘துணைவேந்தர் பதவிகள் ரூ.100 கோடி வரையில் விலை பேசி விற்பனை செய்யப் படுகின்றன’’ என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

‘‘கல்லூரிகளுக்கான இணைவு பெறுவது, தொலைநிலை கல்வி நிலையங்களுக்கான படிப்பு மையம், கட்டடம் கட்டுவது, உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனுமதி வேண்டும். பல சுயநிதிக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். போதிய ஆய்வகம், வகுப்புகள் இருக்காது. சரியான சட்டவிதிகளைப் பின்பற்ற மாட்டார்கள். இவற்றிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொள்ள, தங்களுக்கு வேண்டிய துணைவேந்தர்களை நியமிக்க முயற்சிக்கின்றனர். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணி மீது பணம்கட்டுவதுபோல தனியார் கல்லூரி முதலாளிகள், தங்களுக்கு வேண்டப்பட்டவரைத் துணைவேந்தராக நியமிக்கப் பல கோடிகளைச் செலவழிக்கின்றனர். அரசியல் செல்வாக்கு மூலம் காரியம் சாதிக்கின்றனர். பேராசிரியருக்கு 60 எல், இணைப் பேராசிரியருக்கு 40 எல், உதவிப் பேராசிரியருக்கு 30 எல் என வசூல்செய்து கொள்ளவே கோடிகளைக் கொட்டி துணைவேந்தர் ஆகிறார்கள்” எனச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள்.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் களின் கல்வி, ஆராய்ச்சி சாதனைகள் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவி வகித்தவர்களின் சொத்துகள், வருமானம், பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்றம் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சாதி, அரசியல் தலையீடு, ஊழல் என்ற கறையான்களில் இருந்து உயர்கல்வித்துறை மீட்கப்படுவதே கல்வியைக் காக்கும் உடனடி கடமையாகும்.

- சே.த இளங்கோவன்

‘‘இழந்த புகழை மீட்பேன்!”

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை அறிவிக்கப்பட்டவுடனேயே பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது பேசியவர், “காமராசர் பல்கலைக்கழகத்தோடு நாற்பது ஆண்டு கால அனுபவம் எனக்கு உண்டு. அந்த அனுபவமே பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவதற்கு பேருதவியாக இருக்கும். கடந்த 2013-ம் ஆண்டு இந்தியப் பல்கலைக்கழக தரக்குறியீட்டில் 9-வது இடம் வகித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்த ஆண்டு 77-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்த நிலையை மாற்றி, இழந்த பெருமையை மறுபடியும் மீட்டெடுக்கப் பேராசிரியர்களோடு இணைந்து முயற்சி மேற்கொள்வேன். இரண்டாம் உலகப்போரில் அழிந்த ஜப்பான் பின்னர் பெரிய அளவில் எழுச்சி பெற்றதுபோல் இந்தப் பல்கலைக்கழகமும் எழுச்சி பெறும். தற்போது பதவி ஏற்றுள்ள நான், அடுத்த மூன்றாண்டுகளுக்குள் உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழங்களுள் ஒன்றாக மாற்றிக் காட்ட முயற்சி மேற்கொள்வேன்” என்றார்.

- செ.சல்மான்