Published:Updated:

பழனி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறை; ஆசிரியருக்கு அடி உதை!

பழனி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறை; ஆசிரியருக்கு அடி உதை!
பழனி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறை; ஆசிரியருக்கு அடி உதை!

பழனி: பழனி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த நிலையில், போலீசார் அவரை மீட்டு சென்றனர்.

பழனி அருகே பதினாறு புதூர் எனும் ஊர் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசியராகப் பணியாற்றுகிறார் ஜெயச்சந்திரன். இவரது சொந்த ஊர் ஆயக்குடி, அங்கிருந்து அவர் தின‌மும் பதினாறு புதூரில் இருக்கும் பள்ளிககூடத்துக்கு வந்து ஆசியர் பணி ஆற்றி செல்வது வழக்கம்.

பழனி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறை; ஆசிரியருக்கு அடி உதை!

வேலியே பயிரை மேய்ந்த கதையாக அவர் அங்கு ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்து இருக்கிறார். இது பற்றி அந்தப் பெண் தனது பெற்றோரிடம் சொல்லவே, பிரச்னை பெரிதாகி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது பற்றி கல்வித்துறை அதிகாரி அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு,சம்பந்தப்பட்ட ஆசிரியர் கண்டித்து அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அந்த நிலையிலும் திருந்தாத அவர் மீண்டும் அந்த மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.

இது பற்றி தகவல் தெரிந்ததும் ஊர் மக்கள் திரண்டு சென்று அவரை ஒருவகுப்பறையில் வைத்து அடித்து உதைத்தனர். ,அவர்களிடம் இருந்து ஆசிரியரை போலீசார் தாசில்தார் துணையுடன் சென்று மீட்டனர். இருப்பினும் பொதுமக்கள் ஆத்திரம் தாங்காமல் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பழனி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறை; ஆசிரியருக்கு அடி உதை!

இதனைத்தொடர்ந்து சத்திரப்பட்டி போலீசார், ஜெயச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.