Published:Updated:

வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேட்கலாமா?

பஸ்ஸில் நடக்கும் பஞ்சாயத்து!

##~##

 பவுன் தங்க நகையை, 16-ம் தேதி வாங்குகிறார் முத்துசாமி. 20-ம் தேதி காலை, அவர் வீட்டுக் கதவைத் தட்டும் நகைக் கடை ஊழியர்கள், ''தங்கம் விலை இரண்டு மடங்கு ஏறிடுச்சுங்க. அதனால, 16-ம் தேதி நீங்க வாங்கிட்டுப்போன 5 பவுனுக்கு எக்ஸ்ட்ரா ரூ.30,000 குடுங்க'' என்று கேட்கிறார்கள். மிரண்டுபோன முத்துசாமி, ''என்னங்க அநியாயமா இருக்கு'' என்று அலறுகிறார். ''அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது,  இது எங்க முதலாளி உத்தரவு. 30,000 பணத்தைக் குடுத்துட்டு ரசீது வாங்கிக்கோ. இல்லேன்னா... நகையைக் குடு'' என்று மிரட்டுகின்றனர் ஊழியர்கள். வேறு வழி இல்லாமல் எக்ஸ்ட்ரா பணத்தைக் குடுத்து ரசீது வாங்கிக்கொள்கிறார் முத்துசாமி. 

''முத்துசாமி போலீஸில் புகார் செய்து இருக்கலாமே... நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கலாமே..'' என்று கேட்கலாம்.  ஆனால், அந்த முதலாளி ஜெயலலிதா என்கிறபோது, உங்களால் இந்த ஐடியாவெல்லாம் சொல்ல முடியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போது நாட்டில் நடப்பது இப்படித்தான் இருக்கிறது!

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது உங்களுக்குத் தெரியும். முன்னதாகவே பணம் செலுத்தி மாதக் கட்டண அட்டை வாங்கியவர்களையும் இப்போது கூடுதல் கட்டணம் கேட்டு பாடாய்ப்படுத்தினால்எப்படி?

வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேட்கலாமா?

உள்ளூர் பஸ்களில் பயணம் செய்ய, மாதாந்திரப் பயணச் சீட்டு வாங்கிக்கொள்ளும் முறை, சென்னை,

வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேட்கலாமா?

மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 16-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இந்தப் பயணச் சீட்டு செல்லுபடி ஆகும். ஏ.சி. பஸ் தவிர மற்ற எல்லா உள்ளூர் பஸ்களிலும் பயணம் செய்யலாம். சென்னையில் இந்த மாதாந்திரப் பயணச் சீட்டுக்கு ரூ. 600 வசூலிக்கப்பட்டது. கடந்த 16-ம் தேதி வரை பாஸ் வாங்கிய மக்கள் வழக்கம் போல பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்திய ஜெயலலிதா, கூட்டம் முடிந்த பிறகு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை அறிவித்தார்.

இதில் சாமான்ய மக்களை அதிகம் அதிர்ச்சி அடையவைத்த விஷயம் ஒன்றும் இருந்தது. மாதாந்திரப் பயணச் சீட்டு ரூ. 600-க்கு வாங்கியவர்களிடம், 'நீங்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணம் போதாது. மாதாந்திரக் கட்டணத்தை ரூ.1000-மாக உயர்த்திவிட்டோம். எனவே, இந்த மாதத்துக்கு மேலும் ரூ.340 செலுத்தினால்தான், இந்தப் பயணச் சீட்டை நீங்கள் பயன்படுத்த முடியும்’ என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. (நியாயப்படி பார்த்தால், அவர்கள் ரூ

வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேட்கலாமா?

400தானே வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த மாதத்துக்கு மட்டும் சலுகையாக 60 ரூபாய் குறைத்துள்ளார்களாம்.)  ''ஏற்கெனவே வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேக்குறீங்களே, நியாயமா?'' என்று பயணிகள் கேட்டால், ''இது அரசு உத்தரவு'' என்று  பதில் வருகிறது.

தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கும் போக்கு​வரத்து ஊழியர்களுக்கும் தகராறு நடந்தபோது, தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவர், ''நாங்களும் தெரியாம உங்களுக்கு ஓட்டு போட்டுட்டோம். அதைத் திருப்பி வாங்கிக்கிறோம்னு சொன்னா, இந்த அம்மா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துடுவாங்களா?'' என்று ஆவேசமாகக் கேட்டார்.சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தகராறு நடந்து வருகிறது.

விற்று முடித்த மாதாந்திர பயணச் சீட்டுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்தும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் நீதிமன்றத் துக்குச் செல்லப் பலரும் தயாராகி வருகின்​றனர்.

இது சாத்தியமா என்று வழக்கறிஞர் 'யானை’ ராஜேந்திரனிடம் கேட்டோம். ''ஒரு பொருளை விற்று முடித்த பிறகு, அதற்கான கூடுதல் விலையை கேட்பது சட்ட விரோதம். பயணிகளுக்கு வழங்கப்​பட்டுள்ள மாதாந்திரப் பயணச் சீட்டில் 'கட்டண மாறுதலுக்கு உட்பட்டது’ என்று குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே, இந்தக் கூடுதல் தொகையை வசூலிக்க முடியும். ஆனால், அவ்வாறு அதில் குறிப்பு எதுவும் இல்லை. அதனால், அரசு இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள 'டிராஃபிக்’ ராமசாமி, '' ஒரு பொருளை விற்று முடித்த பிறகு அதற்கான கூடுதல் விலையைக் கேட்பது தவறு. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பயணச் சீட்டில் உள்ள விதிமுறைகளையே நடத்துனரிடம் காட்டி வாதம் செய்யலாம். பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால், போலீஸில் புகார் செய்யலாம். போலீஸிடம் செல்லப் பயமாக இருந்தால், என்னிடம் வரலாம். நான் அவர்களை உயர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று, வழக்குத் தொடுத்து நியாயம் பெற்றுத் தருவேன். '' என்றார் ஆவேசமாக!

இது நியாயமா என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாளர் இயக்குநர் பூபதியிடம் கேட்டோம். ''பாலுக்கு மட்டும் உயர்த்தப்பட்ட விலைதானே கொடுக்கிறார்கள். அதே போலத்தான் நாங்களும் 16, 17 ஆகிய தேதிகளுக்கு ரூ.60-ஐ கழித்துக்கொண்டு மீதி நாட்களுக்குத்தான் ரூ.340 கேட்கிறோம். கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதில் தவறு ஒன்றும் இல்லை'' என்றார்.

நடுத்தர மக்களுக்கான நியாயத்தை உயர் நீதிமன்றம்தான் வழங்க வேண்டும்!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்