சமீபத்தில் புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. ‘புகையிலையினால் ஏற்படும் தீமைகள்’ பற்றிய விழிப்பு உணர்வோடு அந்த நாள் முடிந்துவிடும். இந்த நிலையில், கரூரில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது, ‘கஞ்சா சிகரெட்.’

‘கரூர் மாவட்டத்தில் இதுவரைக் கேள்விப்படாத பெயர்களில் பத்துக்கும் மேற்பட்ட புதிய பிராண்ட் சிகரெட்கள் விற்கப்படுகின்றன. மூன்று ரூபாய், நான்கு ரூபாய்க்கு இவை கிடைக்கின்றன. அந்த கம்பெனிகளின் சிகரெட்டுகளை வாங்கி, அதில் உள்ள புகையிலையை அகற்றிவிட்டு, அதில் கஞ்சா தூள்களை நிரப்பிப் பயன்படுத்துகிறார்கள் பலர். கஞ்சாவை அடைத்தே இந்த சிகரெட்களை விற்பனை செய்வதும் நடக்கிறது. இந்தக் கஞ்சா சிகரெட்டுகளைக் கல்லூரி மாணவர்கள் பலரும், சில பள்ளி மாணவர்களும் பயன்படுத்திச் சீரழிகிறார்கள். இதனால், பெருங்கேடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்று நண்பர் ஒருவர் அதிர்ச்சித் தகவலைத் தட்டிவிட்டார். குறிப்பாக, ‘கஞ்சா அதிகம் புழங்கும் அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள கடைகளில்தான் இந்தக் கஞ்சா சிகரெட்களின் விற்பனை சக்கைப்போடு போடுகின்றன’ என்ற கூடுதல் தகவலையும் சொன்னார். நாம் உடனடியாக அரவக்குறிச்சி பகுதிக்கு விசிட் அடித்தோம்.
கடைகளில் இந்த ‘கஞ்சா சிகரெட்’ பற்றி விசாரித்தோம். சொல்லி வைத்தாற்போல் அனைவரும், ‘அப்படி எந்த சிகரெட்டுகளும் இங்கே விற்பனை செய்வதில்லை’ என்று நழுவினர்.

நம்மை ஓரங்கட்டிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ‘‘இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்குது. சிலர் மறைமுகமாக கஞ்சா சாகுபடியே பண்றாங்க. மாவட்டம் முழுமைக்கும் மட்டுமல்ல, அருகில் உள்ள சில மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் கஞ்சா சப்ளை ஆகுது. இந்தச் சூழ்நிலை தெரிந்துதான் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வரும் பள்ளப்பட்டி பேரூராட்சியில் புகையிலை, சிகரெட் விற்பனைக்குத் தடை போட்டிருக்காங்க. ஆனால், அரவக்குறிச்சியிலும், அதைச் சுற்றியுள்ள சில ஊர்களிலும் கஞ்சா விற்பனை தடங்கல் இல்லாமல் நடக்குது. ‘மாமூலா’ காவல்துறையும் கண்டுக்காம இருக்கு.

கஞ்சாவை நேரடியா விற்றால் பிரச்னை வரும் என்பதால், அதைத் தூளாக்கி சிகரெட்டுகளில் அடைத்து விற்கிறாங்க. ஆரம்பத்தில் பெரிய கம்பெனி சிகரெட்களில் சிலர் அடைச்சு வித்தாங்க. அது சட்டரீதியாக பிரச்னை ஆனதால், இப்போ, கஞ்சாவை அடைத்து விற்கவே புது வகையான சிகரெட்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சுருக்காங்க. கஸ்டமர்கள் தாங்களே கஞ்சாவை நிரப்பிக்கொள்ள இந்த சிகரெட்களை வாங்கலாம். சில இடங்களில் கஞ்சா அடைச்சே விற்பனையும் செய்றாங்க. வெறும் சிகரெட்டுகள் மூன்று அல்லது நான்கு ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கஞ்சா அடைத்த சிகரெட் ஒன்றை அம்பது ரூபாய் வரை விலை வெச்சு விற்கிறாங்க. அதைப் பலரும் வெறித்தனமா வாங்கி ஊதித் தள்ளுறாங்க. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த சிகரெட்களால கெட்டு போவதுதான் அதிகம் நடக்குது. இந்த சிகரெட்கள் இந்தூர், ஹைதராபாத், மும்பை, போபால் போன்ற இடங்களில் தயாரிக்கப்பட்டு இங்கு சப்ளை செய்யப்படுது. இந்த ஊர் பெயரை சிகரெட் பாக்கெட்களில் போட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் எங்கே தயாரிக்கப் படுதுன்னு தெரியலை” என்றார்.

கடைக்காரர் ஒருவரை வற்புறுத்தி பேச வைத்தோம். “இந்த சிகரெட் கம்பெனிகள் எந்த ஊரைச் சேர்ந்தவைன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. வெறும் சிகரெட்டா வித்தா எங்களுக்கு லாபமில்லை. கஞ்சா அடைத்து விற்கப்படும் சிகரெட்களை விற்றால், சிகரெட் ஒன்றுக்கு எட்டு ரூபாய் வரை கமிஷன் தர்றோம்னு தூண்டில் போட்டாங்க. ஆனால், நான் விற்கலைன்னு மறுத்துட்டேன். காசுக்கு ஆசைப்பட்டு சிலர் விற்கிறாங்க. அதனால் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழியிறாங்க” என்று அதிர்ச்சியளித்தார்.

நண்பர் ஒருவர் மூலமாக அந்த சிகரெட் கம்பெனிகளின் சிகரெட் பாக்கெட்களை போட்டோ எடுக்க வாங்கினோம். மூவ்மென்ட்ஸ், இம்பேக்ட், கோல்டு காஸ்ட், மிட்லேண்ட், ஜெட் பில்டர் டிப்புடு என்று தினுசு தினுசான பெயர்களில் சிகரெட் கம்பெனிகள். அளவும் சின்னதாக இருந்தன. சிகரெட்களை தயாரிக்கும் கம்பெனிகள் அங்கீகாரம் பெற்ற கம்பெனிகள்தானா என்பதும் தெரியவில்லை.

கஞ்சா சிகரெட் பற்றி கூடுதல் தகவலோடு நம்மிடம் பேசிய முக்கிய பிரமுகர் ஒருவர், “அரவக்குறிச்சி வறண்ட வானம் பார்த்த பகுதி. அதனால், விவசாயம் சரியாக பண்ண முடியவில்லை. கால்நடை வளர்ப்புதான் இங்கே பிரதானம். ஆனால்,சமூக விரோதிகள் சிலர் இங்கு கஞ்சா பயிர்கூட அவ்வப்போது செய்கிறார்கள். இரண்டு வருஷத்துக்கு முன்பு பள்ளப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை அடைத்து வைத்து ஒரு குரூப் விற்பனை செய்தது. அவர்களைக் காவல்துறை கைது செய்தது. அதுமுதல் பள்ளப்பட்டியில் சிகரெட், பீடி விற்பனைக்கும் பயன்படுத்தவும் ஜமாத் மூலமாகக் கட்டுப்பாடு போட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி பைபாஸ் அருகே தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகர், ஒரு ஏக்கர் நிலத்தி்ல் கஞ்சா பயிரிட்டதாக புகார் ஆனது. இப்போதும் இந்தப் பகுதியில் ஒருவர் கஞ்சா பயிர் செய்வதாகச் சொல்கிறார்கள். காவல்துறை அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்காததால், கஞ்சா பயிரிடுவதும், விற்பனை செய்வதும் இங்கே அதிகமாக நடக்குது. போலீஸுக்குச் சிலர் மாமூல் தருகிறார்கள். மாமூல் தொகையும் அதிகமாகி வருவதால் மறைமுகமாக சிகரெட் மூலமாக கஞ்சா விற்பனையும் நடக்கிறது. இந்தப் பகுதியில் கஞ்சாவை முற்றிலும் தடை செய்யணும். இல்லைன்னா, இளைஞர்களும், மாணவர்களும் தீய பழக்கத்துக்கு ஆளாகி, எதிர்காலத்தைத் தொலைக்கும் நிலை வரும்” என்றார்.

இது சம்மந்தமாக,அந்த சிகரெட் கம்பெனிகளின் டீலர் ஒருவரிடம் பேசினாம். “மற்ற சிகரெட்களைப் போலத்தான் இவையும். இதற்குக் கஞ்சா சிகரெட்டுன்னு தனியாக பெயர் வைக்க வேண்டாம். முறைப்படி அனுமதியோடுதான் இந்த சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன. அங்கீகாரம் பெற்ற கம்பெனிகள் தயாரிக்கும் சிகரெட் பிராண்டுகள்தான் இவை. குறைந்த விலையில் சிகரெட்கள் விற்கணும்ங்கற நல்ல எண்ணத்துலதான் (அடேங்கப்பா!.) குறைந்த விலையில் அந்த சிகரெட்களை விற்கிறார்கள். மத்தபடி,அவற்றில் கஞ்சா அடைத்து நாங்க விற்கவில்லை. யாரோ அப்படி செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்கிறார்.

இதுசம்மந்தமாக, அரவக்குறிச்சி டி.எஸ்.பி முரளிதரனுக்குத் தகவல் தந்தோம். ‘‘இதுமாதிரி தகவல் எதுவும் எனக்கு இதுவரை வரவில்லை. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன். இது சீரியஸான விஷயம்தான்” என்றார்.

எவ்வளவு சீரியஸாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- துரை.வேம்பையன்
படங்கள்: பா.காளிமுத்து, தே.தீட்ஷித்