Published:Updated:

பஞ்சாப்பில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!

பஞ்சாப்பில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!
பஞ்சாப்பில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!
பஞ்சாப்பில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாதகாரம் செய்யப்பட்ட சம்பவத்தைப் போன்றே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நேற்று இரவு 20 வயதான இளம்பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார்.அப்போது காரில் வந்த வாலிபர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக காரில் ஸ்பீக்கரை அதிக ஒலியுடன் வைத்துக்கொண்டு, சுமார் 4 மணி நேரம் நகரை சுற்றி வந்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை கண்டோன்மென்ட் பகுதியில் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

##~~##
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரைத் தேடி வருகின்றனர். அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு முன்பாகவும், அதற்குப் பின்னரும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளில் குறிப்பிட்ட எண்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர். குற்றவாளிகள் அந்த பெண்ணுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.