Published:Updated:

துப்பாக்கிகளுடன் ரவுடிகள் 7 பேர் கைது

வேலூர்: கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி சி.டி.மணியும் அவன‌து கூட்டாளிகளும் இன்று வாலாஜாவில் கைது செய்யப்பட்டனர்.

இன்று மதியம் வாலாஜா போலீஸார் கீழ்புதுப்பேட்டை அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இண்டிகா காரை மறித்து சோதனை செய்ததில் காருக்குள் இருந்த ரவுடி சி.டி.மணியும் அவனது கூட்டாளிகளும் சிக்கினர். பிடிபட்ட சி.டி.மணி, ரவி, வினோத்குமார், இன்னொரு வினோத் குமார், ஆறுமுகம், ராம்குமார் இவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வாலாஜா பாலாஜிபுரத்தைச் சேர்ந்த ஜெய்க ணேஷும் சிக்கி இருக்கிறார். பிடிபட்ட நபர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், பதினோரு செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. வாலாஜா பகுதியில் உள்ள முக்கிய புள்ளி ஒருவரின் வீட்டை கொள்ளை யடிக்கும் திட்டத்தோடு இவர்கள் வந்ததாக சொல்கிறது போலீஸ்.

இதனிடையே, சி.டி.மணியை போலீஸார் என்கவுன்டர் செய்யப் போவதாக தகவல்கள் பரவியதால், அவனுக்காக‌ உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. மணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தர விட்டிருக்கிறது நீதிமன்றம்.

 
ஏ.சசிகுமார்