Published:Updated:

அ.தி.மு.க கவுன்சிலர் மீது மாணவி கற்பழிப்பு புகார்

கோவை: கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 21வது வார்டு கவுன்சிலரான செந்தில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

##~~##
இவர் மீது கோவை, ராம் நகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கோவை மாநகர போலீஸில் புகார் அளித்தார். தன் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி தன்னை கவுன்சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது, "பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
புகார் குறித்த முழுவிவரத்தை போலீசார் வெளியிடவில்லை. புகார்தாரர் தரப்பிலும் இது தொடர்பாக பேச மறுத்துவிட்டனர். கவுன்சிலர் செந்திலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
- சி.ஜெ.ரவி