Published:Updated:

சகோதரிக்கும், மனைவிக்கும் அந்தரங்க கொடுமை செய்த ராணுவ வீரர் கைது (படங்கள்)

சகோதரிக்கும், மனைவிக்கும் அந்தரங்க கொடுமை செய்த ராணுவ வீரர் கைது (படங்கள்)
சகோதரிக்கும், மனைவிக்கும் அந்தரங்க கொடுமை செய்த ராணுவ வீரர் கைது (படங்கள்)

தூத்துக்குடி: மனித கலாசாரத்துக்கு ஒவ்வாத வகையில் தன்னுடன் பிறந்த சகோதரியையும், தனது மனைவியையும் ‘அந்தரங்க கொடுமை’ செய்த ராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டார். கடந்த எட்டு மாதங்களாக அவரைத் தேடி வந்த  போலீஸார், பாதிக்கப்பட்டோர் செய்த போராட்டங்களை அடுத்து, இப்போது கைது செய்திருக்கிறார்கள்.

சகோதரிக்கும், மனைவிக்கும் அந்தரங்க கொடுமை செய்த ராணுவ வீரர் கைது (படங்கள்)

தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன். ராணுவ வீரரான இவர், தன் அக்கா காளியம்மாளின் மகளான குருஈஸ்வரியைத் திருமணம் செய்தார். அழகாக இருக்கும் குருஈஸ்வரி மீது முருகனுக்கு எப்போதும் சந்தேகமாம். கடந்த ஜூலை மாதம் ராணுவ முகாமில் இருந்து ஊருக்கு வந்த முருகன், எந்த மனிதனும் செய்யத் துணியாத கொடுமையை மனைவி குருஈஸ்வரிக்கு நிகழ்த்தி இருக்கிறார்.

அது குறித்து தருவைகுளம் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் காளியம்மாள், ‘‘என்னோட இன்னொரு தம்பி சண்முகசுந்தர ராஜா, என் மககிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கான். அதை வீட்டுக்காரர்கிட்ட சொல்லிடுவேன்னு குருஈஸ்வரி மிரட்டி இருக்கா. சண்முகம் முந்திகிட்டு, என் மகளைப் பத்தி தப்புத்தப்பா முருகன்கிட்ட சொல்லிட்டான். உடனே ராணுவத்துல இருந்து முருகன் ஊருக்குக் கிளம்பி வந்துட்டான்.

ரெண்டு பேரும் சேர்ந்து என் புள்ளையை நிர்வாணமாக்கி ஒரு டேபிளில் படுக்கவெச்சு கை, கால்களை கட்டிபோட்டு மிளகாய்தூள், உப்பு, சாம்பல், சுண்ணாம்பு, மணல் கலந்த கலவையை அவளின் மர்ம உறுப்புக்குள்ளே வெச்சுத் திணிச்சிருக்காங்க. கம்பியை காய வைச்சு மர்ம உறுப்புக்குள்ளேயும், ஆங்காங்கேயும் சூடு போட்டிருக்காங்க. கண்ணுக்குள்ளேயும் ஆங்காங்கே இருக்கும் காயத்திலும் மிளகாய்பொடியைப் போட்டு கொடுமைபடுத்தி இருக்காங்க. இப்படி ஆறு நாட்கள் அந்தக் கொடுமை நடந்திருக்கு.

சகோதரிக்கும், மனைவிக்கும் அந்தரங்க கொடுமை செய்த ராணுவ வீரர் கைது (படங்கள்)

எனக்கும் போனைப் போட்டு கூப்பிட்டவங்க, ‘நீ கொடுக்கிற செல்லத்தாலதான் அவ இப்படி நடக்குறா’னு சொல்லி, என்னையும் அப்படியே செய்துட்டாங்க. இத்தனையும் என் தாய் பூசம்மா கண் முன்னாலதான் நடந்தது’’ என்று கதறி இருந்தார். 

எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த தருவைகுளம் போலீஸார், குற்றவாளிகள் மூவரையும் தேடி வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் பூசம்மாள் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். முருகனும், சண்முகசுந்தர ராஜாவும் தலைமறைவாக இருந்தனர். 

##~~##
மதுரை நீதிமன்ற உத்தரவு, ஜனநாயக மாதர் சங்க போராட்டம் என பல்வேறு உந்துதலின் பலனாக, எட்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது முருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைமறைவாக இருந்த அவர், மத்தியப்பிரதேச மாநிலம் ஜான்சி ராணுவ முகாமுக்குச் சென்று, மீண்டும் பணியில் சேர்வது சம்பந்தமாக விசாரித்து இருக்கிறார்.
அப்போது ராணுவ நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கடந்த 25ஆம் தேதி முருகனை கைது செய்தார்களாம். கோவில்பட்டி ஜே.எம்2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனுக்கு ஆள் இல்லாமல் ஜெயிலில் அடைக்கபட்டிருக்கிறார். அவர் தலைமறைவானபோது உடன் அழைத்துச் சென்ற அவரது இரண்டு குழந்தைகளையும் மீட்டிருக்கிறார்கள்.
சண்முகசுந்தர ராஜா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். அவரைக் கைது செய்வது எப்போது?
எஸ்.சரவணப்பெருமாள்


படங்கள்:
ஏ.சிதம்பரம்