Published:Updated:

மாணவியை கற்பழித்த மாமா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்

மாணவியை கற்பழித்த மாமா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்
மாணவியை கற்பழித்த மாமா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்

கோவை: 13 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் தவிர 4  பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவியை கற்பழித்த மாமா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்

கோவை, ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, தனது தந்தையும் தாயும் பிரிந்ததாலும், தந்தை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒண்டிப்புதூரில் உள்ள தனது மாமா கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி  16ஆம் தேதி, தனது மாமா கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான ரியல் எஸ்டேட் அதிபர் கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, பாலு ஆகியோர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். மேலும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயதான பெயிண்டர்  ஒருவரும் காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

மாணவியின் புகாரின் பேரில் இவர்கள் 5 பேரும் பிப்ரவரி 16ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். 17 வயது பெயிண்டர் பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்தச் சிறையிலும், மற்ற நால்வரும் கோவை மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் 17 வயதான பெயிண்டர்  தவிர மற்ற 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவினை நேற்று போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பிறப்பித்தார். இதனையடுத்து இந்த உத்தரவு நகல்கள் நேற்றிரவு மத்திய சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

##~~##
மேலும், வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 47 சாட்சிகளுடன் 150 பக்கங்களுடன் இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை மகளிர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யபடும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த குற்றப்பத்திரிகை தாக்கலுக்குப் பின் வழக்கு விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
- ச.ஜெ.ரவி