Published:Updated:

மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை: எஸ்.ஆர்.எம். பச்சமுத்து சிபிஐ முன் ஆஜர்! ( படங்கள் )

சென்னை: மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பெற்றதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

வழக்கு ஒன்றில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரி ஜம்போ லாலின், தனது மகள் மானசாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐ-யில் வாக்குமூலம் அளித்ததாக கூறி, அதன் அடிப்படையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

 மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை: எஸ்.ஆர்.எம். பச்சமுத்து சிபிஐ முன் ஆஜர்! ( படங்கள் )

இதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி மேற்கூறிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மனுதாரர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

 மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை: எஸ்.ஆர்.எம். பச்சமுத்து சிபிஐ முன் ஆஜர்! ( படங்கள் )

அதன்படி, பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகிய இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.

 மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை: எஸ்.ஆர்.எம். பச்சமுத்து சிபிஐ முன் ஆஜர்! ( படங்கள் )

அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிபிஐ அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டபோது, அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது.

இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான பச்சமுத்துவும், அவரது மகனும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

படங்கள்: ஏ. முத்துக்குமார்

அடுத்த கட்டுரைக்கு