Published:Updated:

புதுமுகங்களை விரட்டலாமா?

பாய்கிறார் 'பாலை' செந்தமிழன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அந்தக் காலத்தில் வெளியான 'ஒருதலை ராகம்’ முதல் இன்றைய 'பாலை’ வரை புதுமுகங்​கள் நடிக்கும் படத்தை மக்கள் ரசித்து ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தியேட்டர்காரர்கள்தான் குறுக்கே நிற்கிறார்கள்...'' என்கிறார் 'பாலை’ இயக்​குனர் செந்தமிழன். அவரது படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் திண்டாடிய அனுபவத்தை கோபத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 

புதுமுகங்களை விரட்டலாமா?

''படத்தைப் பார்த்து நல்லா இருக்குனு சொல்லட்டும். இல்லைன்னா மோசம்னு திட்டட்டும். ஆனால் அப்படி ஒரு ரிசல்ட் தெரியுறதுக்கு முன்பே காரணமே சொல்லாம பொசுக்குன்னு படத்தைத் தூக்கிடுறாங்க. கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களை மாதிரி படைப்பாளிங்க நிலையைப்பத்தி தியேட்டர்காரங்க துளியும் நினைச்சுப் பார்க்கிறதே இல்லை. எங்க படத்துக்கு ஸ்டார் வேல்யூ கிடையாது. தமிழ்நாட்டில் இருக்கும் 300 தியேட்டர்களையும் மொத்​தமாப் பிடிக்கிற பேராசை எங்களுக்கு இல்லை. 25 தியேட்டர்கள் கிடைச்சாப் போதும்னுதான் அலைஞ்சோம். அதுகூடக் கிடைக்காம நாங்க பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சம் இல்லை. கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸான படத்துக்கு வியாழன் நடுராத்திரி வரைக்கும் தியேட்டர் கிடைக்காமத் தவிச்சோம். அப்படியே தியேட்டர் கொடுத்தாலும் நாலு நாள் கெடு கொடுக்கிறாங்க. புதுமுகங்கள் எடுக்கும், நடிக்கும் படங்களோட படப்பெட்டியை ஏதோ காயலான் கடைப் பொருளாத்தான் பார்க்கிறாங்க. படம் நல்லா இருந்தாலும் படத்தை வாங்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

புதுமுகங்களை விரட்டலாமா?

நாங்களே சொந்தமாப் பணம் போட்டு தியேட்​டர்களை ஒப்பந்தம் பண்ணினோம். பத்திரிகைகளில் வெளிவந்த 'பாலை’ படத்தின் விமர்சனத்தைப் பார்த்துட்டு, மக்கள்

புதுமுகங்களை விரட்டலாமா?

தியேட்டருக்குப் போனால், அதற்குள் படத்தை தூக்கிவிட்டார்கள். அப்படித்தான் 'சித்திரம் பேசுதடி’ ரிலீஸானபோது நாலே நாளில் படத்தை எடுத்து விட்டார்கள். பின்பு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் வாங்கி, தமிழ்நாடு முழுக்க வெளியிட்டது. அதன் பிறகு அது பெரிய ஹிட் படமானது. தமிழ் சினிமாவில் இன்னைக்குப் பெரிய்ய பெரிய்ய ஆளா இருக்கும் எல்லாருமே ஒரு காலத்துல புதுமுகமா அறிமுகம் ஆனவங்கதான். அதனால் புதுமுகங்களை அலட்​சியம் செய்யாதீங்க அவங்களும் மனுஷங்கதான்...'' கொட்டித் தீர்த்தார், செந்தமிழன்!

இந்தப் புகார் குறித்து, சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசினோம். ''கடந்த ஒரு வருடத்தில் புதுமுகங்கள் நடித்த 44 படங்களை ரிலீஸ் செய்து உள்ளோம். கூட்டம் இல்லாத பட்சத்தில் படத்தை தியேட்டரில் இருந்து தூக்குவது நடைமுறைதான். படம் நன்றாக ஓடினால், நிச்சயம் ஆதரவு கொடுப்போம்'' என்றார்.    

- எம். குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு