Published:Updated:

சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )

சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி  அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )
சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )

சிவகங்கை: காதல் பிரச்னையில் பள்ளி மாணவன் ஒருவர் கூலிப்படை உதவியுடன் கல்லூரியில் படிக்கும் அண்ணன், தம்பி இருவரையும் வெட்டி கொலை செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி  அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )

சிவகங்கை அருகே முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் காளிதாசன். சிங்கப்பூரில் பணி செய்கிறார். இவரது மூத்த மகன் அருண்குமார். காளையார் கோவிலில் இருக்கும் மாதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிக்கிறார். இவரது தம்பி சுரேஷ்குமார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கிறார்.

சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி  அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )

சுரேஷ்குமார் மானாமதுரை அருகே இருக்கும் இடைக்காட்டூரை சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி மார்க்ரெட்டை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால், மார்க்ரெட்டும் அதே பகுதியை சேர்ந்த ப்ளஸ் 1 மாணவன் செந்தில் என்பவரும் காதலித்து வந்தனர். மார்க்ரெட்டை காதலிப்பது தொடர்பாக செந்திலுக்கும், சுரேஷ்குமாருக்கும் கடந்த ஆறு மாதமாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று செந்தில், சுரேஷ்குமாரை அழைத்தார்.இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் தனது அண்ணன் அருண்குமார், நண்பர் செந்தில் (மற்றொரு செந்தில்) ஆகியோருடன் கிழக்குளம் விலக்கு ரோடு பகுதிக்கு சென்றனர்.

##~~##
அங்கு செந்திலுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் அருண்குமார், சுரேஷ்குமார், நண்பர் செந்தில் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களின் நண்பர் செந்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லூரி மாணவர்களான அண்ணன், தம்பி கொலை சம்பவத்தால் கொதித்துப்போன முத்துப்பட்டி மக்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி  அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )

தொடர்ந்து சிவகங்கை போலீஸார் கொலையாளிகள் செந்தில், சுந்தரவேல், பாண்டி ஆகியோரை கைது செய்தார்கள். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

சிவகங்கை: காதல் பிரச்னையில் கூலிப்படையை ஏவி  அண்ணன், தம்பி படுகொலை! ( படங்கள் )

காதல் பிரச்னையால் மாணவர்களே கொலையாளியாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செய்தி & படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்