பரமக்குடி: பரமக்குடியில் கடந்த மாதம் நடந்த பி.ஜே.பி. முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் உட்பட 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி பி.ஜே.பியை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முருகன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். பரமக்குடி பெருமாள் கோயில் பகுதியில் பட்டபகலில் நடந்த கொலை முயற்சியில் முருகன் மீது வீசப்பட்ட பைப் வெடிகுண்டுகள் 2 வெடிக்காமல் போயின. இதனால் முருகனை கொளையாளிகள் அரிவாள், பட்டாக் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இந்தக் கொடூரக் கொலை பரமக்குடியில் பதற்றமான சூழலை உருவாக்கி இருந்த நிலையில், ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவில் ஏ.எஸ்.பி. விக்ரமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.
##~~## |
படங்கள்: உ.பாண்டி