Published:Updated:

திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்து அறுத்து கொன்ற காதலன் (படம்)

திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்து அறுத்து கொன்ற காதலன் (படம்)
திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்து அறுத்து கொன்ற காதலன் (படம்)

தருமபுரி: திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் தர்மபுரி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்து அறுத்து கொன்ற காதலன் (படம்)

தருமபுரி மாவட்டம் இண்டூரை அடுத்த மல்லாபுரம் பகுதியை சேர்ந்த மாதையன் மகள் சத்யா பி.காம் பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் மகன் சாம்ராஜ் பி.ஏ. பட்டதாரி. இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்திருகின்றனர்.

இந்த நிலையில் சத்யா வீட்டில் வரண் பார்த்துள்ளனர். குடும்பத்தாரின் நெருக்குதல் காரணமாக சத்யா தன் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் கொதிப்படைந்த சாம்ராஜ் தொடர்ந்து சத்யாவை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று நேரில் பேச வேண்டும் என்று சத்யாவை தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு சாம்ராஜ் வர சொல்லி இருக்கிறார். தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பெண்ணாகரத்தில் இருந்து தர்மபுரி வழியாக மேட்டூர் செல்லும் பேருந்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

##~~##
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சத்யாவின் கழுத்தை சாம்ராஜ் கத்தியால் அறுத்து பேருந்தின் படிக்கட்டில் உருட்டி தள்ளிவிட்டிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சத்யா துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து சாம்ராஜை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசார் விசாரணையில், சத்யா என் காதலை உதர நினைத்ததால் ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டேன் என்று சாம்ராஜ் கூறியிருக்கிறார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
எஸ்.ராஜாசெல்லம்