Published:Updated:

பகவதியம்மன் கோயில் திருவிழா கலவரம்; 2 பேர் கைது! ( படங்கள் )

பகவதியம்மன் கோயில் திருவிழா கலவரம்; 2 பேர் கைது! ( படங்கள் )
பகவதியம்மன் கோயில் திருவிழா கலவரம்; 2 பேர் கைது! ( படங்கள் )

தேனி: பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமான 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகவதியம்மன் கோயில் திருவிழா கலவரம்; 2 பேர் கைது! ( படங்கள் )

தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் நடைபெற்ற பகவதியம்மன் கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே முன் விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் போது ஏற்பட்ட தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பகவதியம்மன் கோயில் திருவிழா கலவரம்; 2 பேர் கைது! ( படங்கள் )

இந்த மோதலில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்சை ஒரு சாரார் கம்பு மற்றும் கற்களால் தாக்கி சேதப்படுத்தினார்கள்.

பகவதியம்மன் கோயில் திருவிழா கலவரம்; 2 பேர் கைது! ( படங்கள் )

இதனால் 6 பேர் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் மீது தலித்துகளை அரிவாளால் தாக்கியதால் தீண்டமை வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கலவரத்தில் ஈடுபட்ட 6 தலித்துகள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்கு முக்கிய காரணமான வடுகப்பட்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்லமணி மகன் விக்னேஷ் மற்றும் வடுகப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் முனியசாமி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பதட்டமான சூழ்நிலை நிலவிவருவதால் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-சண்.சரவணகுமார்
படங்கள்:
வி.சக்தி அருணகிரி