Published:Updated:

மணல் கொள்ளையைத் தடுக்க கைசாலா செயலி அறிமுகம்!

எம்.கணேஷ்
மணல் கொள்ளையைத் தடுக்க கைசாலா செயலி அறிமுகம்!
மணல் கொள்ளையைத் தடுக்க கைசாலா செயலி அறிமுகம்!

மணல்கொள்ளை, மதுக்கடை, ரேசன் பொருள்கள் கடத்தல் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு நேரடி புகார் கொடுக்க கைசாலா செயலி மற்றும் வாட்ஸ்அப் புகார் எண்  நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் அனுமதியின்றி வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுப்பதைத் தவிர்க்கும் வகையிலும், நியாயவிலைக் கடைகளில் இருந்து அரிசி, மண்ணெண்ணெய், பாமாயில், சீனி மற்றும் பருப்பு போன்ற பொருள்கள் கடத்தலைத் தடுக்கும் வகையிலும், மதுக்கடைகளில் கூடுதல் மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் அனுமதியில்லாத நேரங்களில் மது விற்பனை, உரிமம் இன்றி செயல்படும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதற்காக வாட்ஸ்அப் புகார் எண் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

9487771077 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படம், குறுஞ்செய்தியாகத் தெரிவிக்கலாம். அல்லது கைசாலா என்ற செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.செயலி மூலமாகப் புகார்களை தெரிவிக்கும்போது சம்பவம் நடைபெறும் இடத்தையும் தெரிந்துகொள்ளலாம். புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.!" எனத் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் மணல் கடத்தலை இந்த கைசாலா செயலி தடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.