Published:Updated:

``கண்மூடித்தனமாகச் சுட்டார்!” துப்பாக்கியில் சுட்ட பெண் தற்கொலை

சமீபத்தில், இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மற்றும் மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உலகம் முழுவதும் நிகழும் துப்பாக்கிச் சூடு மரணங்களில் பாதி, அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளில் நடப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

``கண்மூடித்தனமாகச் சுட்டார்!” துப்பாக்கியில் சுட்ட பெண் தற்கொலை
``கண்மூடித்தனமாகச் சுட்டார்!” துப்பாக்கியில் சுட்ட பெண் தற்கொலை

லகையே தன் தொழில்நுட்ப பலத்தாலும் ராணுவ பலத்தாலும் அச்சுறுத்தும் அமெரிக்காவையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன துப்பாக்கிச் சூடு சம்பவங்கள். இந்த ஆண்டில் மட்டும் கடந்துபோன 264 நாள்களில், 262 துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் வெவ்வேறு இடங்களில் நடந்திருக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்திருக்கின்றன.

வியாழக்கிழமை காலை 9 மணியளவில், மேரிலேண்ட் பகுதியில், ஸ்னோசியா மொஸ்லே என்ற 26 வயதான பெண், திடீரென துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் 3 பேர் உயிரிழிந்தனர்; 3 பேர் காயமடைந்தனர். பின்னர், அந்தப் பெண் தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலையும் செய்துகொண்டார். மொஸ்லே, மேரிலேண்ட்டிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ள பால்டிமோர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் மேரிலாண்டில் ஒரு மருந்து விநியோக நிறுவனத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஸ்னோசியா மொஸ்லே

மொஸ்லே துப்பாக்கிச் சூடு நடத்திய அன்று காலையில், அவருக்கும் அவரின் சக ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கடும் கோபமடைந்த மொஸ்லே, அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சுட்டதாகச் சக ஊழியரான ஈர்கின் மனைவி கிர்ஸ்டல் வாட்சன் கூறியிருக்கிறார். மேலும், ``அவர் யாரையும் குறிபார்த்துச் சுட்டதாகத் தெரியவில்லை. மிகவும் கண்மூடித்தனமாகச் சுட்டார்” என்று கூறியுள்ளார்  .

மேரிலேண்டில் துப்பாக்கில் சுட்ட மொஸ்லேவைப் பற்றி அவரின் நண்பர் ட்ராய் கோலே கூறுகையில், ``அவர் துப்பாக்கியால் சுட்டார் என்று கேள்விப்பட்டதும், நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் கெட்டவரோ அல்லது கோபக்காரோ அல்ல. எனக்குத் தெரிந்து அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்” என்கிறார்  .

மொஸ்லே 2011-ம் ஆண்டு, ஒவர்லியா ஹை ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்து, பால்டிமொர் கெளண்டியிலுள்ள கல்லூரியில் சேர்ந்து, 2015ம் ஆண்டு வரை படித்ததாகவும், ஆனால், அவர் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதற்கு முன், அவர் மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜான்ஸ் ஹாகின்ஸ் பைவ்யூ மருத்துவமனை, 4 பேரில் இருவர் மிக மோசமான நிலையில் இருப்பதாக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. மற்ற இருவர் சீரான நிலையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து, ஹார்ஃபோர்ட் கவுண்டியின் காவல்துறை விசாரித்து வருகிறது .

இந்த நிலையில், விஸ்கன்சின் மாநிலத்திலும், நியூயார்க் நகரிலும் இதே போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திருக்கிறது. விஸ்கன்சினில் மிடில்டன் பகுதியில், ஒரு மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரிலுள்ள பென்சில்வேனியாவில், மசன் டவுன் என்ற இடத்தில், உறவினர் ஒருவர் இறந்ததையொட்டி, உறவினர்கள் கூடிய வீட்டில் திடீரென இரண்டு, மூன்று பேர் புகுந்துச் சுட்டதில், 4 பேர் காயமடைந்தனர்  . 

சமீபத்தில், இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மற்றும் மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உலகம் முழுவதும் நிகழும் துப்பாக்கிச் சூடு மரணங்களில் பாதி, அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளில் நடப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, வெனிசூலா, கெளடிமாலா ஆகியவை மற்ற நாடுகளாகும்.