Published:Updated:

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் 3 நாள் விசாரணைக்குப் பின் கைது!

கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் மூன்று நாள்கள் நடந்த விசாரணையை அடுத்து, பிஷப் பிராங்கோ முளய்க்கல் இன்று கைதுசெய்யப்பட்டார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் 3 நாள் விசாரணைக்குப் பின் கைது!

ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல், கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து தன்னை 2014 - 16-ம் ஆண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிஷப்பை கைதுசெய்யக்கோரி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்,  கடந்த 14 நாள்களாக கொச்சியில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். வாட்டிகனுக்கும் கன்னியாஸ்திரிகள் புகார் அனுப்பினர். இந்த நிலையில், தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முன் ஜாமீன் பெற பிஷப் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், முன் ஜாமீன் வழங்கப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து, பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு பிஷப் பிராங்கோ முளய்க்கல் கடந்த 19-ம் தேதி போலீஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் மூன்றாவது நாளாக இன்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், நேற்று இரவு 9.30 மணியளவில் புகார் அளித்த கன்னியாஸ்திரியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மூன்று நாள்கள் தொடந்து நடந்த விசாரணையின் முடிவில், பிஷப் பிராங்கோவை கோட்டயம் போலீஸார் இன்று கைதுசெய்தனர். கைதுகுறித்த தகவலை ஜலந்தர் காவல்துறைக்கு கேரள போலீஸார் தெரிவித்தனர். மேலும், கன்னியாஸ்திரி மற்றும் பிஷப்பை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism